சந்தேகம் ஏதும் இல்லாததால் ஜெயலலிதாவின் வீட்டிற்கு சென்று ஆய்வு நடத்தவில்லை என ஆறுமுகசாமி ஆணையம் தற்போது அறிவிப்பு கொடுத்துள்ளது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நடந்த விசாரணையை நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் 600 பக்கங்களைக் கொண்ட அறிக்கையை இன்று முதலமைச்சரிடம் தற்போது சமர்ப்பித்து இருக்கிறது. ஜெயலலிதா மரணத்தில் குளறுபடிகள் இருக்கிறது என்று எழுந்த புகாரின் பேரில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டது.

தற்போது ஐந்தாண்டுகள் விசாரணை நடைபெற்ற நிலையில் இன்று அதற்கான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக பன்னீர்செல்வம் உட்பட 100க்கும் மேற்பட்டோரிடம் இந்த விசாரணை நடத்தப்பட்டது, ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் எந்த விதமான தவறும் இல்லை என எய்ம்ஸ் மருத்துவமனையும் அண்மையில் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தது.
தற்போது இந்த அறிக்கையை எல்லாம் 600 பக்கங்கள் அடங்கிய விசாரணை அறிக்கையாக முதலமைச்சரிடம் தற்போது ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் ஜெயலலிதாவை போயஸ் கார்டனில் இருந்து அப்போலோ மருத்துவமனைக்கு கொண்டு வந்த விதத்தில் சந்தேகத்தன்மை எதுவுமே கிடையாது. அதனால் அவரது வீட்டிற்கு நாங்கள் சென்று ஆய்வு செய்யவில்லை என ஆறுமுகசாமி ஆணைய தலைவர் கூறியுள்ளார்.
