திருமணம் ஆகாத பெண்கள் கரு கலைக்க உரிமை உண்டு என உச்ச நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பை வழங்கியுள்ளது.
பெண்கள் சட்டபூர்வமாகவும், பாதுகாப்பாகவும் கருக்கலைப்பு செய்வதற்கு அனைத்து உரிமைகளும் உண்டு கருக்கலைப்பு யாருக்கு எந்த சூழலில் செய்ய வேண்டும் என்பது குறித்து விதிமுறையை ஒழுங்க படுத்துவதற்காக தான் உச்சநீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
கருக்கலைப்புக்கு உண்டான தீர்ப்பை பொருத்தவரை திருமணம் ஆனவர், திருமணம் ஆகாதவர் என்ற வித்தியாசமே கிடையாது. எல்லோரும் சமம் தான் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. கரு கலைப்பு காண உரிமை என்பது திருமணத்தின் மூலம் மட்டுமே கிடைக்கும் என்ற நிலைமை மாறுவது மிகவும் அவசியம். பாதுகாப்பாற்ற முறையில் கரு கலைப்பு செய்து கொள்வது தடுக்கப்பட வேண்டியது.

திருமணம் ஆன மற்றும் ஆகாத பெண்களிடையே செயற்கையான வேறுபாட்டை இது உருவாக்குகிறது, இனி கரு கலைப்பு உரிமை பொறுத்தவரை எந்த பெண்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. குழந்தை பெற்றுக் கொள்வது அவரவர்களின் சுய உரிமைகளில் அடங்கும். திருமணம் ஆகாத பெண்களுக்கு திருமணமான பெண்ணை போன்ற உரிமைகளை தற்போது வழங்குகின்றது. பாதுகாப்பான பாலியல் தொடர்பான தகவல்கள் அனைத்து பிரிவினர்களுக்கும் சென்றடைய வேண்டும் என்பதை அரசு உறுதி செய்தாக வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
