காமெடி நடிகர் போண்டாமணிக்கு இரண்டு சிறுநீரகங்களும் செயல் இழந்துவிட்டதாகவும், அவருக்கு உதவ முன் வர வேண்டும் என்று அவருடைய சக நடிகரான பெஞ்சமின் கண்ணீர் மல்க வீடியோ பேசி வெளியிட்டுள்ளார்.
இலங்கையில் பிறந்து வளர்ந்து போண்டாமணி பவுனு பவுனுதான் என்ற பாக்யராஜ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். பின்னர் பல படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் தொடங்கி காமெடி நடிகருக்கு இணையான கதாபாத்திரங்களில் நடித்து அனைவரும் அறியும் படி வளர்ந்தார். மேலும் ஒரு சில கேம் ஷோக்களிலும் அவர் நடித்து வந்தார். குறிப்பாக அவர் நடித்த சுந்தரா ட்ராவல்ஸ், மருதமலை, வின்னர் ஆகிய படங்களில் இவரை பார்க்காத ஆளே இருக்க முடியாது. தற்போது இவருக்கு சினிமாவில் வாய்ப்பு குறைந்து விட்டதால் ரியல் எஸ்டேட் மற்றும் ஒரு சில தனியார் நிகழ்ச்சிகளில் நடித்து வருகிறார்.
ஓடவும் முடியாது… ஒளியவும் முடியாது ICC போட்ட புது ரூல்ஸ் இதோ

இவருடன் சேர்ந்து நடிக்கும் சக நடிகரான பெஞ்சமின் தற்போது இவருக்காக ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் பேசியபோது அண்ணா போண்டா மணி அவர்களுக்கு இரண்டு கிட்னிகளும் செயல் இழந்துவிட்டது. அவர் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் இருக்கிறார். உயிருக்கு போராடும் அவருக்கு இந்த வீடியோவை பார்க்கும் நண்பர்கள் மேல் சிகிச்சைக்கு பணம் தந்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.
மேலும் நாடு விட்டு நாடு வந்து இலங்கையில் இருந்து தமிழகம் வந்து பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு தற்போது நடிகராகி திருமணம் செய்து இரு குழந்தைகளுக்கு தகப்பனாக உள்ளார். தற்போது உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் அவரை காப்பாற்ற வேண்டும் அது உங்களால் முடியும். மேலும் அரசியல் தலைவர்கள் யாராவது உதவ முன் வந்தால் நன்றாக இருக்கும்” என கூறியுள்ளார். மேலும் “இலங்கையில் இருந்து அனாதையாக வந்தவர் அனாதையாகவே போகக்கூடாது தயவு செய்து உதவி பண்ணுங்க ப்ளீஸ்” என அந்த வீடியோவில் கொஞ்சம் மிகவும் கண்ணீர் மல்க அழுது கேட்டுள்ளார்.
