நடிகர் அஜித் குமார் தான் என்னுடைய ஆசிரியர் என அவரை புகழ்ந்து தள்ளி தன்னுடைய twitter பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார் பிரபல தமிழ் நடிகர் ஜான் கோக்கன். இவர் சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியவர்.
இவர் ஒரு தீவிர அஜித் ரசிகர், அது எந்த அளவிற்கு என்றால் வெளியே ஒரு ஃபங்ஷனுக்கு செல்லும்போது கூட அஜித்துடைய படம் பொறித்த ஒரு டீ சட்டை தான் போட்டுக் கொண்டு செல்வார். அந்த அளவிற்கு ஒரு அஜித் வெறியனாக இண்டஸ்ட்ரியல் இருப்பவர் தான் நடிகர் ஜான் கோக்கன். மேலும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அஜித்தை பற்றி கூறியிருப்பதாவது :- “பில்லா படத்தில் உங்களை பார்த்தேன் அதன் பிறகு வீரம் படத்தில் உங்களுடன் நடித்தேன் தற்போது உங்களுடைய அடுத்த படமான ஏகே 61 படத்திலும் நடித்திருக்கிறேன். இது மிகவும் ஒரு நீண்ட கால பயணம். உங்களை நான் சந்தித்ததில் கடவுளுக்கு தான் நன்றி தெரிவிக்கிறேன்.

உங்களிடமிருந்து நான் கற்றுக் கொள்ள வேண்டியது என் வாழ்நாள் முழுக்க நீடிக்கும். உங்களை நான் எப்போதுமே காதலிக்கிறேன் அஜித் சார். என்னை முதல் முதலில் உங்களுடைய பணிவான சிரிப்புடன் வரவேர்த்த உங்களுக்கு நன்றி, எனக்கு யாருமே மரியாதை செலுத்தாத போது நீங்கள் எனக்கு மரியாதை செலுத்தியதற்கு நன்றி, சினிமாவைப் பற்றி எதுவுமே தெரியாத கத்துக்குட்டியாக இருந்த எனக்கு சினிமாவைப் பற்றி அறிவுரை கூறியதற்கு நன்றி, எனக்கு தேவையான நேரத்தில் உற்சாகமூட்டும் வார்த்தைகளை கூறி என்னை ஊக்குவித்ததற்கு நன்றி, உங்களுடைய கடின உழைப்பினால் என்னை எப்போதுமே வசீகரிக்கிறீர்கள் அதற்கு நன்றி, வாழ்நாளில் எப்போதுமே முயற்சியை விட்டுவிடக் கூடாது என எனக்கு கற்றுக் கொடுத்ததற்கு நன்றி, அஜித்குமாராக இந்த சினிமா உலகில் நீங்கள் இருப்பதற்கு நன்றி, நான் என்னுடைய வாழ்நாளில் பல ஆசிரியர்களை சந்தித்து இருக்கிறேன். ஆனால் மிக முக்கியமான வாழ்க்கை பாடத்தை மட்டும் நான் உங்களிடம் இருந்து தான் கற்றுக் கொண்டிருக்கிறேன். நீங்கள் எனக்கு கொடுத்த அன்பிற்காக நான் உங்களுக்கு எப்போதுமே கடமைப்பட்டிருக்கிறேன்.”

என இப்படியாக நடிகர் அஜித்குமார் மேல் அவர் வைத்திருக்கும் அதீத அன்பை தற்போது வெளிக்காட்டி இருக்கிறார் நடிகர் ஜான் கோக்கன்