நடிகர் பிரகாஷ் ராஜ் தமிழ் திரையுலகம் மட்டுமல்லாது இந்தியா அளவிலும் ஒரு பிரபலமான நடிகர் ஆவார். இவர் அவ்வப்போது தனது அரசியல் சிந்தனைகளையும் சமூக விழிப்புணர்வுகளையும் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிடுவார். சீர்திருத்த சிந்தனைகளை அடிக்கடி தனது படத்தில் வரும் வசனங்கள் மூலமாக சமூகவலைதளம் மூலமாகவும் தொடர்ந்து வலியுறுத்தி வரும் பிரகாஷ்ராஜ் மத்திய அரசை நேரடியாக விமர்சிப்பவர்.
உள்ளடையை மட்டுமே முழு ஆடையாக போர்த்தி கொண்டு கவர்ச்சி போட்டோவை பதிவிட்டிருக்கும் பீஸ்ட் நாயகி பூஜா

அமிட்ஷா கொஞ்ச நாட்களுக்கு முன்பு இந்தி மொழியை அனைவரும் கற்க வேண்டும் எனக் கூறியபோது இந்தி கற்றுக் கொள்வதால் நமக்கு என்ன பயன் இந்தியாவில் வேறு நிறைய பிரச்சினைகள் உள்ளது ஹிந்தி கற்றுக்கொள்வது மட்டும்தான் இங்கு ஒரே பிரச்சினையா ? என்று அமிட்ஷாவுக்கு பதிலடி கொடுக்குமாறு ஒரு டீவீட்டை போட்டிருந்தார். அதேபோல் இன்று காலையும் ஒரு டீவீட்டை போட்டுள்ளார்.

அதில் அவர் கூறியுள்ளது என்னவென்றால் “ஒருவர் டீ விற்றார் என்பதை நீங்கள் நம்பும் போது அதே நபர் தனது நாட்டையும் விற்கிறார் என்று ஏன் நீங்கள் நம்ப முன் வர மருகிறீர்கள்” என்று பதிவிட்டிருந்தார். இதைப் படிக்கும் போதே தெரிகிறது இவர் நேரடியாக இந்திய பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து பேசுகிறார் என்று தற்போது இந்தக் டீவீட்டிற்கு மோடி எதிர்ப்பாளர்களும் பாஜக எதிர்ப்பாளர்களும் தங்களது ஆதரவை கமெண்டில் தெரிவித்து வருகின்றனர்.
The ones who believed he sold chai..
— Prakash Raj (@prakashraaj) April 23, 2022
aren’t believing he is selling the nation too .. #justasking