நடிகர் விக்ரமிடம் உங்களுக்கு தல பிடிக்குமா இல்லை தளபதி பிடிக்குமா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்துள்ளார்.
விக்ரமின் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் படம் தான் கோப்ரா. இந்த படத்திற்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் இந்திய சினிமா ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ஏனென்றால் இந்த படத்தின் ட்ரெயிலர் வெளிவந்ததிலிருந்து ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளை இந்த படம் கிளப்பிவிட்டது.
Viral Video | சமந்தாவின் ஊ சொல்றியா மாமா பாடலுக்கு குத்தாட்டம் போட்ட விராட் கோஹ்லியின் வீடியோ வைரல்

ஏனென்றால் அந்த படத்தில் பத்துக்கும் மேற்பட்ட கெட்டப்புகளில் விக்ரம் கலக்கியிருக்கிறார். அதோடு மட்டுமல்லாமல் இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் இர்பான் பதான் அந்த படத்தில் வில்லன் ரோல் செய்திருப்பதால் சில கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியிலும் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது அதனால் இந்த படம் எப்போது வெளிவரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
