நடிகர் விக்ரம் உடல் நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நடிகர் விக்ரம் திடீரென மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் அவரை சென்னையில் உள்ள காவிரி மருத்துவமனையிள் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் அவருக்கு அங்கு தீவிர சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வந்துள்ளது.

மேலும் இவர் நடித்து நாளை டீசர் வெளியாக உள்ள பொன்னியின் செல்வன் படத்தில் விக்ரம் ஆதித்ய கரிகால சோழனாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் படம் வெளி வர இருக்கும் இந்த சமயத்தில் இவர் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாரே என பொன்னியின் செல்வன் பட குழுவினரும் விக்ரமின் ரசிகர்களும் அதிர்ச்சியில் உள்ளனர். மேலும் அவர் சீக்கிரம் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என வேண்டி வருகின்றனர்.
