நடிகர் விஷாலுக்கு படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் ஒரு முன்னணி நடிகராக இருப்பவர்தான் விஷால். இவர் வினோத்குமார் இயக்கத்தில் லத்தி என்னும் திரைப்படத்தில் நடித்த வருகிறார். வழக்கம் போல் இந்த படத்திலும் ஒரு போலீசாக நடித்துள்ளார். இந்த படத்தில் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ஒரு நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படம் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வரும் என அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்தது. இவரின் முன்தையா படம் பெரிய அளவில் ரசிகர்களை ஈர்காததால் இந்த படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்து வருகிறது.

மேலும் இவரின் அடுத்த படமான மார்க் ஆண்டனி படத்தின் மீதும் ஆர்வம் அதிகரித்துள்ளது. ஏனென்றால் அந்த படத்தில் இவருக்கு இணையாக எஸ் ஜே சூர்யா நடிக்கப்போகிறார் என தகவல்கள் வெளிவந்தது. மேலும் இந்த படத்திற்கான சூட்டிங் விரைவில் தொடங்க உள்ளது.
தற்போது லத்தி படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. இதில் 100 ரௌடிகள் சேர்த்து விஷாலை தாக்குவது போல ஒரு மிகப்பெரிய ஆக்க்ஷன் காட்சி படமாக்கப்பட்டது. அந்த காட்சியில் உண்மையிலேயே காலில் பலத்த அடி பட்டு நிலை தடுமாறி கீழே விழுந்து மீண்டும் எழுந்து கூட நிற்க முடியாத நிலையில் அவர் இருந்தார். உடனடியாக அவரை மீட்டு முதலுதவி அளிக்கப்பட்டு பின்பு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதனால் அந்த ஷூட்டிங் பாதியிலேயே நின்றது.
