கே ஜி எஃப் 2 படத்தின் கதாநாயகன் யாஷ் அவரது மனைவி ராதிகா பண்டிட் உடன் காதல் வயப்படும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

கேஜிஎப் ஒன்றாம் பாகம் படத்தின் வெற்றியை தொடர்ந்து அதே கூட்டணி மீண்டும் இணைந்து எடுத்த படம்தான் கேஜிஎப் 2. இந்தப் படம் பிரம்மாண்டமாக உருவாகியது. அதுமட்டுமில்லாமல் இந்த படம் வெளியானதில் இருந்து இன்றுவரை வசூலில் சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கிறது. இந்திய அளவில் 5வது அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையையும் இந்த கன்னட படம் புரிந்திருக்கிறது.
மேலும் ஆயிரம் கோடி வசூலை அடுத்த இரண்டு நாட்களுக்குள் தொட்டுவிடும் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. இந்த நிலையில் 2018 முதல் திரைப் படங்களில் கவனம் செலுத்தி வந்த யாஷ் அதனால் சற்று ஓய்வு எடுக்கலாம் என்று யோசித்து மனைவியுடன் உல்லாசமாக கடற்கரைக்கு சென்றுள்ளார். இவருக்கு இரண்டு குழந்தையும் உள்ளது.

குழந்தையுடன் சேர்ந்து கடற்கரைக்கு சென்றிருக்கிறார் யாஷ். மேலும் அங்கு மனைவியுடன் கொஞ்சலின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை அவரின் மனைவி ராதிகா பண்டிட் இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். நடிகைகளுக்குடப் கொடுக்கும் வகையில் அழகாக இருக்கிறார் ராதிகா பண்டிட். இந்த ஜோடி தான் தற்போது டாக் ஆஃ தே டவுன் ஆக இருந்து வருகிறது.
