தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம்வருபவர் ஆண்ட்ரியா அங்கிளோ இந்தியன் குடும்பத்தை சேர்ந்த இந்த நடிகை ஆரம்பத்தில் பாடகியாகத்தான் அறிமுகமானார். பின்னர் சினிமா படங்கள் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்துவந்தார், தற்போது முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துவருகிறார்.

மேலும் பல நடிகைகள் நடிக்க தயங்கும் படங்களிலும் துணிச்சலாக நடித்தும் வருகின்றார். தற்போது அனல் மேல் பனித்துளி என்ற படத்திலும் நடித்திருக்கிறார். இந்த படத்தை வெற்றிமாறன் தயாரித்திருக்கின்றார். இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது அதில் பல தகவல்கள் நடிகை ஆண்ட்ரியா கூறியிருக்கின்றார், அனல் மேல் பனித்துளி படத்தில் ஒரு காட்சியில் நடிக்கும்போது அருவெறுப்பாகவும், கூச்சமாகவும் இருந்தது. மேலும் இந்த படத்தில் நடித்தது புதுமையாக இருந்தது, எனக்கே அதிர்ச்சியாக இருந்தது , இதில் நடித்த அருவருக்கத்தக்க ஒரு சில காட்சிகள் என் நிஜ வாழ்க்கையில் இதை விட பல சம்பவங்கள் நடந்துள்ளது எனவும் கூறினார். இவர் மிஸ்கின் இயக்கத்தில் பிசாசு படத்தில் படக்குழுவினர் பல பேர் சூழ்ந்திருக்க படத்தின் முக்கியக்கட்சிகளுக்காக நிர்வாணமாக நடித்தது குறிப்பிடத்தக்கது.

இவர் தமிழ் படங்களில் நடிப்பதற்கு முக்கிய காரணம் இளம் இசையமைப்பாளர் அனிருத் எனவும் இருவரும் பல ஆண்டுகள் காதலித்து இருவருக்கும் கருத்துவேறுபாடுகள் ஏற்படவே பிரிந்துவிட்டதாகவும் நடிகை அண்ரியா அனிருத்துடன் சேர்ந்து இருக்கும் புகைப்படங்கள் லீக் ஆகி சலசலப்பை ஏற்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது.
