படப்பிடிப்பின்போது நெஞ்சு வலி ஏற்பட்டதால் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது தற்போது நா.அஸ்வின் இயக்கும் படத்தில் நடிகர் பிரபாஸுக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடித்து வருகிறார் இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வந்தது அப்போது நடிகை தீபிகா படுகோனேவுக்கு லேசான நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது இதையடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு தீபிகா படுகோனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து அவரது உடல்நலம் தேறி உள்ளது அதன் பின்னர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட தீபிகா படுகோனே ஹோட்டலில் மருத்துவர்கள் கண்காணிப்பில் ஓய்வெடுத்து வருவதாக கூறப்படுகிறது இந்நிலையில் உடலில் சில மாற்றங்கள் ஏற்பட்டதால் நடிகையை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து மருத்துவர்கள் பரிசோதித்து வருகிறார்கள் தீபிகா படுகோன் உடல்நிலை சரியாகும் வரை படப்பிடிப்புகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது
