விக்ரம் படத்தில் பகத் பாசிலுக்கு ஜோடியாக நடித்த நடிகை காயத்ரி, கணவருக்கும் எனக்கும் செட் ஆகவில்லை என கூறியிருக்கிறார்.
டுவிட்டரில் ஒருவர் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் காயத்ரி தனது வருங்கால கணவருக்கு மறதிநோய் இருப்பது என்பதே தெரியாது அது கடைசியில் தான் தெரியும். அதேபோல சூப்பர் டீலக்ஸ் இல் தனது கணவன் திருநங்கையாக மாறி விட்டார் என்பது கூட அவருக்கு அப்போது தெரியாது. அதன் பிறகு அந்த வரிசையில் விக்ரம் படத்திலும் தனது கணவர் பகத் பாசில் என்ன வேலை செய்கிறார் என்பது கடைசிவரை தெரியாது. இப்படி எந்த கணவர்களையும் புரிந்து கொள்ளாத ஒரு மனைவியாக காயத்ரியை தமிழ் சினிமாவில் வருகிறார் என காமெடியாக ஒரு போஸ்ட்டை ஒருவர் பதிவு செய்திருந்தார்.

அதற்கு கமெண்ட் செய்திருக்கும் காயத்ரி ஹஸ்பண்டும் எனக்கும் ராசியே இல்லை என ரிப்ளை செய்துள்ளார் தற்போது இந்த ரிப்ளை சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
