தமிழகத்தில் மின்சாரத் துறை அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜி அவர்கள் மத்திய அரசின் நெருக்கடி காரணமாக தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது எனக்கூறி மின் கட்டணம் உயர்வை அறிவித்துள்ளார். இது தமிழக மக்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிர்ச்சியாகவும் இருக்கிறது. இந்த நிலையில் இதை கண்டித்து எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் ஜெயா குமார், அண்ணாமலை போன்ற பலர் கண்டித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழ் திரைப்படங்களில் நடிகையும் மற்றும் அரசியல் விமர்சகருமான நடிகை கஸ்தூரி திமுக அரசை குறித்து நக்கலாக ட்வீட் செய்திருக்கிறார் இவர் தமிழ் சினிமாவில் சில ஐட்டம் பாடலுக்கும் நாடனமாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது இவர் போட்டிருக்கும் டீவீட்டில் :- “TNEB மின்சார விலையேற்றம் எதிர்பார்த்ததுதான். ஆனால் கவலை வேண்டாம். மக்களின் Current bill சுமை அதிகரிக்காத வண்ணம் அரசாங்கம் அடிக்கடி power cut செய்து மக்களுக்கு உதவும் என்ற நம்பிக்கை உள்ளது” என குற்றியுள்ளார்.
