Watch Video | மேடையில் பேசிக்கொண்டிருக்கும்போது தீடீரென நடிகையின் தோள் மீது கை வைத்த நபர் | கடுப்பான நடிகை பூர்ணா | வீடியோ வைரல்

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தன்னுடைய தோள் மீது கை வைத்த ஒருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நடிகை பூர்ணாவின் வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்னிந்திய சினிமாவில் சற்று எல்லோருக்கும் தெரிந்த முகமாக இருக்கும் நடிகை பூர்ணா. இவர் கேரளாவை சேர்ந்தவர் ஆவார். இவர் 2004 இல் வெளியான மஞ்சு போல் ஒரு பெண் குட்டி என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார். அந்தப் படத்திற்கு பிறகு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் அவருக்கு குவிந்தது. அதன் பிறகுதான் தமிழில் கந்தக்கோட்டை, ஆடுபுலி, ஜன்னலோரம், தகராறு, மணல் கயிறு 2, கொடிவீரன், சவரக்கத்தி என பல படங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பெரிதும் பேசப்பட்டார்.

“எவ்ளோ வேணாலும் பணம் குடுக்குறேன் வா” … லெஜெண்ட் சரவணன் ஆசை வார்த்தைக்கு மயங்காத ஹிந்தி நடிகை கத்ரீனா | Flashback என்ன ?

அதன்பிறகு நடுவில் பட வாய்ப்பு இல்லாததால் சில ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக இருந்தார். இந்நிலையில் தெலுங்கில் ஸ்ரீதேவி ட்ராமா கம்பெனி என்ற ரியாலிட்டி தொடர் நடக்கிறது. அதில் நடுவராக இவர் பங்கேற்றிருக்கிறார். சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய போது அவரின் மீது அந்த நிகழ்ச்சியின் போட்டியாளர் இம்மானுவேல் பூர்ணாவின் தோள் மீது கை வைத்து பேசியுள்ளார். கை வைத்ததும் உடனே அலறி அடித்து அவர் பக்கம் திரும்பி “என்னம்மா இது என்ன பண்றீங்க என்னை எப்படி நீங்க தொடுவீங்க. என்று அவரைப் பார்த்து திட்டிவிட்டு கோபமாக மேடையை விட்டு வெளியேறினார்.

https://www.youtube.com/watch?v=65SsM7rOm5U

பூர்ணா இந்த வீடியோவும் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது இதற்கு முன்பு தி ஜோடி என்ற நிகழ்ச்சியில் சிறந்த நடனமாடும் இளைஞர்களுக்கு கன்னத்தில் முத்தமிட்டு அவரின் கன்னத்தை கடித்து விடுவார். அந்த வீடியோக்களும் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. ஒரு நிகழ்ச்சியின் நடுவர் இப்படித்தான் ஆண் பிள்ளைகளுக்கு முத்தம் கொடுத்து அவர்களின் கன்னத்தைக் கடிப்பாரா இதை கேட்க யாரும் இல்லையா என அப்போது சிலர் பூர்ணாவின் நடத்தையை கண்டித்தனர்.

அதற்கு அவர் பதில் கூறும்போது எனக்கு பிடித்தவர்களை நான் இப்படி கண்ணத்தை கடிப்பது வழக்கம் என் அம்மாவுக்கும் நான் நிறைய முறை அதை செய்து இருக்கிறேன். அதனால் இதை நான் ஒரு அன்பின் வெளிப்பாடாக தான் பார்க்கிறேன். நான் முத்தம் கொடுத்த அனைவரும் எனக்கு குழந்தைகள் போல அதனால் அதை பெரிதாக்க வேண்டாம் என்று கூறியிருக்கிறார்.

Spread the love

Related Posts

முதல்வர் ஸ்டாலினின் அன்னையார் தயாளு அம்மாளுக்கு உடல்நலகுறைவு | மருத்துவமனையில் அனுமதி

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மனைவியும் மற்றும் இந்நாள் முதல்வர் ஸ்டாலின் அவர்களுடைய தாயாருமான தயாளு

“ஹிந்தியில் நடிக்க எனக்கு விருப்பமில்லை” | தெலுகு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு தடாலடி பதில்

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு இந்தியில் நடிக்க எனக்கு விருப்பமில்லை என தடாலடியாக பதிலளித்து

ஹிஜாப்-க்கு எதிரான தடை தொடரும் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கர்நாடகாவில் ஹிஜாப் பிரச்சனை தலை விரித்தாட தொடங்கியதிலிருந்து அங்கு மத கலவரம் உண்டாகும் சூழல் ஏற்பட்டது.