விஜய் ஆண்டனி நடிக்கும் கொலை திரைப்படத்தில் கையில் சிகரட்டுடன் ராதிகாவின் ஒரு போஸ்டர் வெளிவந்திருப்பது அனைவரையும் அதிர்ச்சி குள்ளாகியுள்ளது.
இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி எப்படி இசையில் ஒரு தனி இடத்தை பிடித்திருக்கிறாரோ அதேபோல நடிப்பிலும் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்திருக்கிறார். இவரின் படங்கள் எல்லாமே கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம் நல்ல கருத்துக்களையும் நல்ல திரில்லர் படங்களையும் தமிழ் சினிமாவுக்கு வழங்கி வருகிறார். அதனால் இவர் படத்தினை குடும்பத்தோடு பார்ப்பது என இவருக்கென ஒரு சில ரசிகர்கள் இருக்கின்றனர்.

தற்போது இவர் கொலை என்னும் ஒரு படத்தில் நடித்திருக்கின்றார். இந்த படத்தில் ரித்திகா சிங் அர்ஜுன் சிதம்பரம் ராதிகா உள்ளிட்ட பல நடித்துள்ளனர். இந்த படத்தை பாலாஜி குமார் இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தின் போஸ்டர் தினமும் வெளியாகிறது. அதன்படி இந்த படமும் பார்க்க ஒரு செம்ம த்ரில்லராக இருக்கும் என தோன்ற வைக்கிறது. தற்போது இந்த படத்தின் போஸ்டரில் ஒன்றாக ராதிகாவின் போஸ்டர் வெளிஇடப்பட்டுள்ளது. அந்த போஸ்டர் பார்க்க என்னதான் மாஸாக இருந்தாலும் அதில் அவர் கையில் சிகரெட் பிடித்து இருப்பது ஒரு தரப்பு மக்களை அதிர்ச்சி குள்ளாக்கியது.
எப்போதுமே போஸ்டரில் நடிகர்கள் சிகரெட் வைத்திருந்தால் அதை ஒரு தரப்பு கண்டித்து வருகின்றது. அப்படித்தான் சர்க்கார் படத்தில் விஜய் கையில் சிகரெட் உடன் ஒரு போஸ்டரை வெளியிட்டதால் மிகப்பெரிய சர்ச்சையாகி அந்த போஸ்டரையே பட குழுவினர் கேன்சல் செய்தனர்.
அதன்படி தற்போது ராதிகா சரத்குமாரும் கையில் சிகரெட் உடன் ஒரு போஸ்டரை வெளியிட்டிருப்பதால் அந்த படக்குளிவினரையும் ராதிகாவையும் தற்போது திட்டி வருகின்றனர். கையில் சிகரெட் போஸ்டர் வெளியிட்ட சர்ச்சையில் அஜித் விஜய் தனுஷ் ரஜினி என பல நடிகர்கள் சிக்கி உள்ளனர் தற்போது அந்த லிஸ்டில் ராதிகாவும் புதிதாக சேர்ந்துள்ளார்.
