அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவியை எடப்பாடி பழனிச்சாமியிடம் ஒப்படைக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதற்கு முன்பு எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளராக பதவி ஏற்ற போது ஓ பன்னீர்செல்வம் ஆட்கள் அதிமுக தலைமை அலுவலகத்தை சூறையாடியது குறிப்பிடத்தக்கது. அலுவலகத்தின் பக்கத்தில் இருக்கும் இடங்களில் போராட்டம் செய்து பல சேதங்களை ஏற்படுத்தினர். இதனிடையே இபிஎஸ் ஓபிஎஸ் என இரு தரப்பும் கடுமையாக மோதிக் கொண்டது. இதனால் பதற்றம் வரக்கூடாது என அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது.

தற்போது இந்த சீல் வைக்கப்பட்ட வழத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் இபிஎஸ் ஓபிஎஸ் மனு அளித்தனர் இரண்டு அணியினர் இது குறித்து உயர்நீதிமன்ற உத்தரவுக்காக காத்திருந்தனர். தற்போது அதிமுக அலுவலக சாவியை எடப்பாடி பழனிச்சாமியின் ஒப்படைக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வைக்கப்பட்டசீல் அகற்றக் கோரியும் வழக்கை முடித்திருக்கிறது உயர்நீதிமன்றம்.
மேலும் இபிஎஸ் ஓபிஎஸ் மொதல்லில் இதுவரை இபிஎஸ் கையே ஓங்கி இருக்கிறது. இதனால் ஓ பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் சற்று கோபத்துடன் இருக்கின்றனர். மேலும் இந்த உத்தரவும் அவர்களை மேலும் கொந்தளிக்க செய்யும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
