காலையில் உடலுறவு கொள்ளும் போது நம் உடலில் ஏற்படுகின்ற நல்ல மாற்றங்களை பற்றி தான் இந்த பதிவில் பார்க்க உள்ளோம். காலையில் உடலுறவு கொள்வது மூலம் ஆக்சிடோசின் என்கிற ஹார்மோனை வெளியிடுவதற்கான காரணமாக இருக்கிறது. மேலும் இது தங்கள் பார்ட்னருடன் நெருக்கத்தை அதிகரிக்க உதவும் என்கின்றனர் சில வல்லுனர்கள்.
சிலர் தனியாக புணர்ச்சி செய்வார்கள் அல்லது கல்யாணமானவர்கள் பார்ட்னர் உடன் உடலுறவில் ஈடுபடுவது வழக்கம் ஆனால் காலையில் நாம் அதை செய்வதன் மூலம் எவ்வாறு நம் உடலில் மாற்றம் ஏற்படுகிறது ? அதிகப்படியான மக்கள் இரவில் தான் உடலுறவில் ஈடுபடுவார்கள் ஆனால் அதை காலையில் செய்தால் எப்படி இருக்கும் வாருங்கள் தெரிந்து கொள்ளலாம்.

நாம் அதிகாலையில் உடலுறவு வைப்பதன் மூலம் காலையில் சீக்கிரம் எழுந்திருக்க வேண்டும் என்று சுறுசுறுப்பை நமக்குள் அது கொடுக்கும். மேலும் இதை நாம் தொடர்ந்து கடைபிடித்தால் நம்முடைய தூக்க சுழற்சியை இது சீராக்கும். மேலும் இரவில் சரியாக தூங்குவதற்கு நம் உடலை இது ஆயத்தப்படுத்தும்.
மேலும் தங்களுடைய நாளை தொடங்குவதற்கும் தமது பார்ட்னர் உடன் நெருக்கத்தை அதிகரிக்கவும் இது பயன்படுகிறது. மேலும் செக்ஸுக்கான தூண்டுதல் நோர்பைனெப்ரைன் என்கிற ஹார்மோனை இது சுரக்கச் செய்கிறது. இது நம் இதயத்தில் இருந்து வரும் பிறப்புறுப்புகளான ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. மேலும் கட்டி அணைக்க தூண்டும் ஹார்மோனான ஆக்ஸிடோசனை சுரக்க செய்கிறது.
நம்முடைய நாள் எப்படி தொடங்கி எப்படி முடியப் போகிறது என்பது நமக்கு தெரியாது. அதனால் அந்த நாளை தொடங்குவதற்கு முன்பே ஒரு புத்துணர்ச்சியோடு தொடங்க அதிகாலையில் காலையில் உடலுறவு வைப்பது நமக்கு நல்ல சிந்தனைகளையும் கவனத்தையும் தரும். மேலும் அந்த நாளை நம் கவனத்துடன் இருக்க அது உதவியாக இருக்கும். அதனோடு சேர்ந்து முழு எனர்ஜியுடன் வேளையில் ஈடுபாடு காட்டவும் அது நமக்கு உதவுகிறது.
உடலுறவை என்பது வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத ஒரு இன்பம். ஆனால் அதற்கும் மேல் உடல் உறவு என்பது ஒரு நல்ல உடற்பயிற்சி. உங்களின் உடலின் கலோரிகளை குறைக்க அது உதவுகிறது. இந்த கலோரியை காலையிலேயே நம் குறைக்க இந்த உடலுறவு செய்தால் அதன் மூலமாக உங்கள் உடலின் தேவையற்ற கலோரிகளை சீக்கிரமாக குறைக்கலாம்

மேலும் உடலுறவு என்றாலே இரவில் தான் செய்ய வேண்டும் என்கிற பழக்கத்தை இது மாற்றுகிறது. அதிகாலையில் மூளை சுறுசுறுப்பாக வேலை செய்ய இது உதவுகிறது. மேலும் இரவில் வேலை பார்த்துவிட்டு சோர்வுடன் வீட்டுக்கு வரும்போது உடலுறவு செய்தால் அது எந்த அளவிற்கு சுறுசுறுப்பை தரும் என்று தெரியாது. உடலுறவு செய்து விட்டு உடனே இரவில் தூங்கி விடுவோம் ஆனால் அதிகாலையில் செய்தால் அது நம்மை மிகவும் ஆக்ட்டிவாக வைத்திருக்கும்.