மும்பையிலிருந்து தமிழகத்துக்குள் பரவும் காற்று மாசு, வாழ தகுதியற்ற மாநிலமாக மாறும்..! மும்பையில் காற்று PM2.5 மாசுபாடு அதிகமாக இருக்கிறது நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டிருக்கிறது அங்கே மனிதர்கள் வாழ தகுதியற்ற ஒரு நகரமாக அது மாறி வரும் சூழலில் அங்கே தீபாவளிப்பொழுதும் பட்டாசுகளும் வெடிப்பதில்லை பழுதான வாகனங்கள் முக்கியமாக சாலைகளில் ஓட்ட அனுமதி இல்லை ஏனெனில் அங்கே மிகவும் மோசமான காற்று பாதிப்படைந்திருக்கிறது அங்கே தூசுகள் நிறைந்த காற்றானது மிகவும் அதிகமாக உள்ளது அங்கே மாசு அதிகமாக இருப்பதால் மனிதர்களும் அங்கு நோய்வாய்ப்படுகின்றனர் அதேபோல ஒவ்வொரு மாநிலமாகவும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது இந்த காற்று மாசு இப்பொழுது தமிழகத்திலும் காற்று மாசானது அதிகரித்துவிட்டது மும்பையை விட சென்னையில் சற்று குறைவுதான் இருந்தாலும் சென்னையில் போன வருடத்தை விட இந்த வருடம் காற்றானது அதிகமாசுடன் காணப்படுகிறது.
பழுதான வாகனங்கள் ஒட்டிச் செல்வது குப்பைகளை எரிப்பது டயர்களை எரிப்பது பிளாஸ்டிக்களை எரிப்பது என பலரும் செய்து வருகின்றனர். இங்கே வாழ தகுதியற்ற ஒரு நகரமாக மாறி வருகிறது என்பதுதான் நிதர்சனமான உண்மை இது சென்னையோடு மட்டும் முடியவில்லை காற்றானது ஒரு எல்லைக்கு உட்பட்டது இல்லை சென்னையில் இருந்து மற்ற மாநிலங்களுக்கும் இது பரவத் தொடங்குகிறது பக்கத்தில் இருக்கும் திருவள்ளூர் காஞ்சிபுரம் என எல்லா மாவட்டங்களுக்கும் காற்றானது பரவுகிறது மிகவும் இயற்கையான தென்மாவட்டங்களிலும் இந்த காற்று மாசானது வெகுவாக அதிகரித்து வருகிறது இது எதனால் அதிகரிக்கிறது என்றால் மரங்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது மலைகளின் எண்ணிக்கையும் குறைந்து கொண்டே செல்கிறது மலைகளை குடைதல் இப்பொழுது தமிழகத்தில் அதிகரித்து உள்ளன மரங்களை அதிகமாக வெட்டி விற்பனை செய்கின்றனர். மரங்களை வெட்டி வீழ்த்துகின்றனர் யாரும் மரக்கன்றுகளை நடுவதில்லை இதுபோல நடவடிக்கைகளால் தான் இப்பொழுது காற்று மாசு அதிகரிக்கிறது
முதல்வர் ஸ்டாலின் பெயருக்கு தடை: சுப்ரீம் கோர்ட்டில் அதிமுகவிற்கு கிடைத்த வெற்றி ?
இந்த டிஜிட்டல் யுகத்தில் 4G, 5G, 8G என்று அதிகரித்து வரும் இந்த சூழலில் டூ கே கிட்ஸ் களுக்கு இயற்கை என்றால் என்ன என்று அவர்களுக்கு தெரியவில்லை அவர்களைப் பொறுத்தவரை மொபைல் ஸ்க்ரீன் தான் உலகம் அது மட்டும் தான் அவர்களுக்கு இயற்கையாக தெரிகிறது வாகனங்களில் அதீத ஒலி எழுப்புதல் வாகனங்களில் புகையுடன் நெருப்பு காக்க வாகனங்களில் Modify செய்து பல சேட்டைகளை செய்து வருகின்றன மறுபுறமோ மலைகளை குடைந்து எடுத்துக்கொண்டிருக்கிறார்கள் காடுகளை அழிக்கிறார்கள் இவ்வாறு மலைகளை குடைவதை நிறுத்த வேண்டும் ஒரு மலை உருவாகுவதற்கு பல ஆண்டுகள் எடுத்துக்கொள்கிறது அதை ஒரு சில மாதங்களிலேயே மலைகளை குடைந்து எடுக்கிறோம் இது நல்லதுக்கு அல்ல.
மும்பையிலிருந்து தமிழகத்துக்குள் பரவும் காற்று மாசு, வாழ தகுதியற்ற மாநிலமாக மாறும்..!
இப்பொழுதே பல நகரங்கள் இங்கே மக்கள் வசிப்பதற்கு ஏதுவாக இல்லை நிலத்தடியில் நீர்மட்டமும் குறைந்து விட்டது மரங்கள் நடுவது அதிகரித்தால் நீர்மட்டம் உயரும் காற்றானது மாசுபடுதல் வெகுவாக குறையும் மக்களும் நோய்வாய்ப்பட மாட்டார்கள் இப்பொழுது நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்களானதும் அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது காற்று மூலம் பரவும் பல காய்ச்சல்கள் இங்கே உருவாகிக் கொண்டிருக்கிறது பெயர் கூட தெரியாத காய்ச்சல்கள் எப்படி உருவாகிறது காற்று மூலம் பரவுகிறது காற்று இயற்கையாகவே சுத்திகரிக்கும் சக்தி படைத்தது அவ்வகையாக காற்று சுத்திகரிப்பு அடையாமல் இருக்கிறதே என்றால் அதில் மரங்கள் குறைவாக இருக்கிறது என்றுதான் பொருள் வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்போம் என்ற திட்டம் தொடங்கி அந்தத் திட்டங்கள் எதுவும் பயன் தரவில்லை.
நடிகை மீனாவுக்கு Yes.. ஓ.பன்னீர் செல்வத்துக்கு NO.. விரட்டிய நைனார் நாகேந்திரன் அதிர்ச்சி பின்னணி..!
சீமான் வேண்டுகோள் :
காடுகள் அழிப்பு மற்றும் மலைகளை சுரண்டல், விவசாய நிலங்களை அபகரித்து விமனநிலையங்கள் கட்டுதல், பிளாட் போட்டு விவசாய நிலங்களை விற்பது என இயற்கைக்கு எதிராக திட்டங்கள் அரசு உடனடியாக நிறுத்தவேண்டும் என்பதே சீமான் கோரிக்கை.

வீடு கட்டி அதை வாடகை விட்டு அதில் சம்பாதிக்கலாம் என்பதில் தான் அனைத்து மக்களும் யோசிக்கிறார்களே தவிர அந்த இடத்தில் ஒரு மரத்தை நடலாம் இயற்கையுடன் வாழலாம் நல்ல ஒரு ஆரோக்கியத்துடன் வாழலாம் என்று யாரும் சிந்திப்பதில்லை வீட்டிற்கு ஒரு மரத்தை நிச்சயம் வளர்க்க வேண்டும். இந்த காற்று மாசானது இனிவரும் பிள்ளைகளையும் வெகுவாக பாதிக்கத்தொடங்கும் விவசாய நிலங்களை அழித்து அங்கு ஏர்போர்ட் கட்டுவது, பிளாட் போட்டு அதனை பல கோடிகள் பல லட்சங்களில் வருமானம் பார்த்து வருகிறார்கள் இயற்கை மீது சிறிதளவும் அக்கறை இல்லை பல விவசாய நிலங்கள் இப்படித்தான் அழிந்து கொண்டிருக்கிறது சென்னையைச் சுற்றி இருக்கும் அனைத்து விவசாய நிலங்களும் இப்பொழுது காணாமல் போகின்றன எங்கும் பயிர் நிலங்களே இல்லை ஏனெனில் சென்னைக்கு மிக அருகாமையில் உள்ள பிளாட் ஆயிரம் சதுர அடி 2000 சதுர அடி என விற்று பல கோடிகளை வருமானம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் இவ்வாறு வருங்கால திட்டங்கள் ஏதும் இன்றி மலைகளை குடைந்து எடுத்தல், மரங்களை வெட்டுதல் விவசாய நிலங்களை அழித்து பிளாட் போட்டு பல லட்ச கோடிகள் சம்பாதித்தல் மோசமான வாகனங்களை பயன்படுத்துதல், டயர்களை எரித்தல், பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துதல் அதனை எரித்து நச்சுப்புகை உருவாக்குதல், நச்சுப்புகை வெளியிடும் தொழிற்சாலைகள் மூடாமலிருத்தல் காற்று மாசுபடுதலில் அரசு மீது குற்றம் சொல்ல முடியாது மக்களும் சற்று அக்கறை இருக்கவேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்து வீட்டிற்கு ஒரு மரம் நடுதல் வேண்டும்.
பசுமை மண்டலம் மாறும் மெட்ரோ நகரங்கள் :
முன்னொரு காலத்தில் பசுமை நிறைந்த மாவட்டங்கள் என்று பெருமைப்படுத்தப்பட்ட சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், இன்று மெட்ரோ நகரங்களாக மாறி பசுமையைக் காண முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. பசுமை மண்டலங்களாக இருந்த வடபழனி, அண்ணாநகர் போன்ற பகுதிகளில் தற்போது கான்கிரீட் கட்டிடங்களாக மட்டுமே நிறைந்துள்ளன. மரங்கள் எங்கே? செடியின் நிழலில் கூட இல்லை சிறு குழந்தைகள் விளையாட முடியாத சூழல் உருவாகி விட்டது. இது எதிர்கால தலைமுறைக்கு ஒரு பெரிய அபாயமான சூழலை உருவாக்குகிறது.
பள்ளிகளில் இயற்கை பயிற்சி முக்கியம் :
நாம் இன்று சுற்றுசூழல் கல்வியை பள்ளிகளில் சொல்லிக்கொடுத்தாலும், அது வெறும் புத்தகக் கட்டுரையாகவே இருக்கிறது. குழந்தைகள் ஒரு மரம் எப்படி வளர்கிறது என்பதே தெரியாமல் ஸ்மார்ட்போனில் வீடியோவாகப் பார்க்கின்றனர். பள்ளிகளில் நேரடியாக மரக்கன்று நடும் நிகழ்ச்சிகள், விவசாய கள பயிற்சிகள், இயற்கை தொடர்பான சிறு சிறு செய்முறைப் பயிற்சிகள் போன்றவை கட்டாயமாக கற்றுக்கொள்ளவேண்டும். இயற்கையை பார்த்து குழந்தைகள் வளரும்போது மட்டுமே எதிர்கால சூழலுக்கு பதில் அளிக்கக் கூடியவர்களாக மாறுவர்.
இந்நிலையில் அரசு மட்டும் நடவடிக்கை எடுப்பது போதாது. மக்களும் சமத்துவ பொறுப்பு கொண்டு இயற்கையை காக்க முன்னிலை வகிக்க வேண்டும். ஒரு வீடு கட்டும்போது ஒரு மரத்தை நட்டாலே போதுமானது. வாகன பராமரிப்பில் கவனம் செலுத்தி, பழுது பிடித்த வாகனங்களை சாலைகளில் ஓட்டாமல் இருக்கவேண்டும். வீடுகளில் குப்பைகளை முறையாக தனிமைப்படுத்தி கையாளவேண்டும். அரசு நிலங்களை முறையாக கண்காணித்து, இயற்கை வளங்களை பாதுகாக்கும் திட்டங்கள் வெறும் பேப்பரில் இல்லாமல் நடைமுறையிலும் வரவேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்து.
இந்தியா, சீனா மீது டிரம்ப் புதிய வரிகள்: யாருக்கு மிகுந்த தாக்கம்?
உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்