தற்போது தொலைத்தொடர்பு சேவை சந்தையில் முதலிடத்தில் உள்ள நிறுவனம் ஏர்டெல் தான் எப்போது ஜியோ நிறுவனம் பந்தயத்தில் குதித்ததோ அப்போதிலிருந்தே எல்லா தொலைதொடர்பு நிறுவனங்களுக்கும் போட்டி ஏற்பட்டது.
தற்போது ஏர்டெல் நிறுவனம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக ஒரு தகவல் கசிந்துள்ளது அது என்னவென்றால் ஏற்கனவே ஏர்டெல் நிறுவனம் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தியது இது சென்ற வருடம் நவம்பர் மாதம் நடந்த ஒரு நிகழ்வு தற்போது மீண்டும் ஏர்டெல் நிறுவனம் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்த போவதாக ஒரு அறிவிப்பு வெளியே வந்துள்ளது.

இப்போது ஏர்டெல் நிறுவனம் ஒரு ஒரு கஸ்டமர்களிமிருந்தும் 200 ரூபாய் அதிகம் வசூலிக்கிறது அதை மாற்றி அமைத்து ஒரு ஒரு கஸ்டமர்களிமிருந்தும் 300 ரூபாய் வரை அதிகப்படுத்தி வசூலிக்க ஏர்டெல் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்த கட்டண உயர்வானது இன்னும் மூன்று முதல் நான்கு மாதங்களுக்குள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் இதை அறிந்த ஏர்டெல் வாடிக்கையாளர்கள் மிகவும் வருத்தத்தில் இருக்கின்றனர்.