அஜித்தை வம்புக்கு இழுக்கும் வகையில் அவரையும் அண்ணாமலையும் வைத்து ஒரு போட்டோ எடிட் செய்து ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார் தமிழக பிஜேபியை சேர்ந்த பிரசாத் ரெட்டி.
டுவிட்டரில் கடந்த சில தினங்களாக அஜீத் குமாருக்கு பல விமர்சனங்கள் எழுந்தது. இதனால் அந்த விமர்சனங்களுக்கு எல்லாம் பதிலளிக்க வேண்டும் என்பதற்காக அவரின் மேனேஜர் ஆன சுரேஷ் சந்திரா அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டிருந்தார் அந்த பதிவு ஒட்டுமொத்தமாக சொல்ல வருவது என்னவென்றால் நம்மைப்பற்றி பேசுபவர்கள் எப்போதுமே பேசிக் கொண்டுதான் இருப்பார்கள், அவர்களின் பேச்சைக் காதில் போட்டுக் கொள்ளாமல் உங்கள் மனம் போல் நீங்கள் செயல்படுங்கள் என கூறப்பட்டிருக்கும்.

அந்த போட்டோவை தற்போது அண்ணாமலை யுடன் அஜித் இருக்குமாறு எடிட் செய்து 2 AK களும் (அஜித்குமார் & K. அண்ணாமலை) உயர்ந்த சிந்தனை கொண்டவர்கள் என்று போடபட்டு,
தேவையற்ற விமர்சனங்களால் திசை திரும்பாமல் வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்ற ஒரே மாதிரியான சிந்தனைகளைக் கொண்ட கதைகளை சொன்ன பாஜக தலைவர் அண்ணாமலையும் நடிகர் அஜீத் குமாரும் என அவர் பதிவிட்டிருந்தார். இந்தப் பதிவிற்கு தற்போது அஜித் ரசிகர்கள் பல கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். ஏனென்றால் அரசியல் விரும்பாத ஒரு நடிகர் அஜித், அவரை ஏன் அரசியல் விவாதங்களில் இழுத்து விடுகிறீர்கள் என கமெண்டில் திட்டி வருகின்றனர்.

ஆனால் அஜித்திற்கு இப்படி நடப்பது இது முதல் முறை அல்ல, ஏற்கனவே வலிமை அப்டேட் உலகமெங்கும் ட்ரெண்டிங் ஆகி கொண்டிருக்கும் நேரத்தில் வானதி சீனிவாசன் அவர்கள் என்னை ஓட்டுப் போட்டு ஜெயிக்க வைத்தால் நான் வலிமை அப்டேட் வாங்கி தருவேன் என்று தன்னுடைய தேர்தல் ஆசைக்காக அஜித்தின் வலிமை அப்டேட் டாப்பிக்கை எடுத்து ட்வீட் செய்தார். இப்படி வளைத்து வளைத்து பல அரசியல் பிரமுகர்கள் அஜித்தின் பெயரை அரசியலில் இழுப்பது அவரின் ரசிகர்களுக்கு அறவே பிடிக்கவில்லை. மேலும் அடிக்கடி இவரின் பெயர் அரசியல் வட்டாரத்தில் அடிபடுகிறது இவரும் சீக்கிரம் அரசியலுக்கு வந்து விடுவார் என்றும் ஒரு சிலர் பேசுகின்றனர்.