நடிகர் அஜித் தனது குடும்பத்துடன் ஹோட்டல் பார்ட்டியில் சரக்கு அடிப்பது போல ஒரு போட்டோ வெளியாகி இணையதளத்தை பரபரப்புக்குள்ளாக்கி உள்ளது.
நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகராக வலம் வருபவர். இவரின் சிறு சிறு அசைவுகளை கூட ரசிகர்கள் பெரிதாக நினைத்து அதை பாலோ செய்து வருகின்றனர். உதாரணத்திற்கு சொன்னால் அமர்க்களம் படத்தில் அஜித் படத்தில் அணிந்திருந்த செயின், காப்பு, பேண்ட் சட்டை அந்த உடை அப்படியே அணிந்து அந்த படத்திற்கு சென்ற பல ரசிகர்கள் உண்டு. இன்னும் அந்த தீனா படத்தில் அஜித் எப்படி ஸ்டைலாக சிகரெட் பிடித்து நடந்து வருவாரோ அதேபோல பல ரசிகர்கள் ரீல் செய்தும் வருகின்றனர்.
இதனால் நடிகர் அஜித் அவர்கள் தன்னுடைய மங்காத்தா படத்தில் இருந்து பிறகு நான் எந்த படத்தில் தண்ணி அடிப்பது சிகரெட் பிடிப்பது போன்ற காட்சி நடிக்க மாட்டேன் என சபதம் விட்டார். தற்போது வரை அந்த சபதத்தை அவர் கடைபிடித்து வருகிறார். அவருடைய எந்த படத்திலும் சிகரெட் பிடிப்பது தண்ணி அடிப்பது போன்ற காட்சிகள் இருக்காது. வீரம் படத்தில் கூட தண்ணி அடித்து விட்டு ஒரு காட்சியில் தமன்னாவிடம் அளப்பறை பண்ணுவார் தவிர அவர் சரக்கு அடிப்பது போல் இங்கேயும் காட்டி இருக்க மாட்டார்கள்.

அதுபோன்றுதான் அவர் இன்று வரை இளைஞர்களுக்கு ஒரு ரோல் மாடலாக இருந்து வருகிறார். தற்போது பாரிசுக்கு குடும்பத்துடன் சுற்றுலா சென்றுள்ள அஜித் அங்கு ஒரு ஹோட்டலில் குடும்பத்துடன் சரக்குடன் இருப்பதாக ஒரு புகைப்படம் வெளியாகி உள்ளது. அதில் உண்மையிலேயே சரக்கு தானா இல்லையா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். சிலர் அதை சரக்கு என்று சொல்லி அஜித்தையும் அவர் குடும்பத்தையும் வசைப்பாடி வருகின்றனர். தற்போது எந்த புகைப்படம் இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது.
