நயன்தாரா திருமணம் நடக்கும் ரிசார்ட்டுக்கு வெளியே நின்று நரிகுறவர் சிறுவன் ஒருவன் நான் அஜித்தை பார்க்கவேண்டும் எனக்கு உதவுங்கள் என மன்றாடி இருக்கும் ஒரு வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இவர்கள் இருவரும் ஆறு வருடங்களாக காதலித்து இன்று திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணம் கோலிவுட் வட்டாரத்தில் மட்டுமல்லாமல் இந்திய சினிமா வரலாற்றிலேயே ஒரு முக்கிய நிகழ்வாகும். ஏனென்றால் நயன்தாரா இந்திய அளவில் மதிக்கப்படும் ஒரு பெரிய உச்ச நட்சத்திரமாகம் அவரின் திருமணம் என்றால் அது கண்டிப்பாக ஹாட் நியூஸ் தான்.


இந்த வகையில் இவர்களது திருமணம் பல சினிமா நட்சத்திரங்கள் முன்னிலையில் இன்று மகாபலிபுரத்தில் உள்ள ஒரு ரிசார்ட்டில் கோலாகலமாக நடந்தது. இந்த நிலையில் அந்த ரிசார்ட்டுக்கு வரும் நட்சத்திரங்களைப் பார்க்க அங்கு கூட்டம் அலைமோதுகிறது மேலும் ஒரு நரிக்குறவர் சிறுவன் அஜீத் குமாரை நான் பார்க்க வேண்டும் அதற்காக தான் இங்கு வந்தேன் அவரை எனக்கு காட்டுங்கள் என ஒரு வீடியோவில் அவர் பேசி இருக்கிறார் மேலும் எனக்கு அஜித்தை காட்டுங்கள் அஜித்தை மட்டும் பார்த்துவிடுகிறேன் என கூட்டத்தில் நின்று மன்றாடியும் உள்ளான் அந்த சிறுவன். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளம் எங்கும் வேகமாய் பரவி வருகிறது.
’அஜித்தை பாக்காம போக மாட்டேன்’- நயன் திருமணத்தில் அடம்பிடிக்கும் நரிக்குறவர் சிறுவன்!#AjithKumar #AK61 #Nayantharawedding #NayantharaVigneshShivan pic.twitter.com/iVnOl6gdZW
— Honcock AK 🎭 (@HONCOCK_AK) June 9, 2022
Him : ""Ajith ah pakka vanthen""
— Honcock AK 🎭 (@HONCOCK_AK) June 9, 2022
❤️❤️Love towards him ❤️❤️#NayantharaVigneshShivan#VigneshShivanWedsNayanthara#Valimai | #AjithKumar | pic.twitter.com/bVn7JvS4QE