வேற யாராவது எங்கள தொட்டா நாங்க சும்மா இருக்கமாட்டோம் | விஜயை கலாய்த்த மகேஷ் பாபு ரசிகர்களை வெச்சு செய்த அஜித் ரசிகர்கள்

சமூக வலைதளத்தில் எப்போதுமே அஜித் மட்டும் விஜய் ரசிகர்கள் மோதல் வழக்கமான ஒன்றாகவே இருந்து வருகிறது. எப்போது நாம் சமூக வலைதளங்களில் சென்றாலும் அவர்களின் சண்டை இருந்து கொண்டே தான் இருக்கும். ஆனால் இவர்களுக்கு இடையில் வேறு யாராவது உள்ளே புகுந்தால் இந்த இரண்டு ரசிகர்களும் சேர்ந்து அவரை வச்சி கிழித்து விடுவார்கள்.

அதே போல் தான் வீரம் படம் வெளியான போது நார்த் இந்தியாவை சேர்ந்த ஒரு மூவி ரிவ்யூ செய்பவர் அஜித்திற்கு தமன்னா தாத்தா பேத்தி போல இருக்கிறது என கலாய்த்துள்ளார். அப்போது விஜய் ரசிகர்கள் பலரும் அஜித்துக்கு ஆதரவாக செயல்பட்டு அந்த meme போட்ட அந்த நபரை திட்டி தீர்த்தனர். அவ்வப்போது ஒருவரை ஒருவர் படம் வெளியாகும் போதும் விஜய் படத்திற்கு அஜித் ரசிகர்கள் பேனர் வைப்பது அஜித் படத்துக்கு விஜய் ரசிகர்கள் பேனர் வைப்பது என்ன சில சமயம் இரண்டு ரசிகர்களும் ஒன்றாக இருப்பார்கள்.

“பீஸ்ட் படம் பார்த்து மிரண்டு போய்ட்டேன், தளபதி விஜய் இப்டி பண்ணுவாருன்னு நெனைச்சு கூட பாக்கல” | வனிதா ஓபன் டாக்

தற்போது வலிமை பீஸ்ட் என இரண்டு ரசிகர்களுக்குமே ஒரு தோல்வி படம் வந்திருப்பதால் சமூக வலைதளங்களில் சற்று அமைதியாகவே இருக்கின்றனர். இந்த சமயம் பார்த்து மகேஷ்பாபு ரசிகர்கள் விஜய்யை வம்பு இழுத்திருக்கின்றனர். அதாவது போக்கிரி படத்தின் கதை மகேஷ் பாபுவின் ஒரு தெலுங்கு படத்தின் ரீமேக் தான் என்று நாம் எல்லோருக்கும் தெரியும். அந்த படத்தில் ஒரு டான்ஸ் காட்சியை விஜய் எப்படி செய்கிறார் என கலாய்த்து ஒரு மகேஷ் பாபு ரசிகர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். அதாவது மகேஷ்பாபு இந்த பாடலுக்கு எப்படி நடனம் ஆடி இருப்பார் ஆனால் விஜய் அதை கெடுத்து இருக்கிறார் என்பது போல அதில் அவர் கூறியிருக்கிறார்.

இதனைக் கண்டு வெறுப்படைந்த அஜித் ரசிகர்கள் எங்களின் துறையில் இருக்கும் தமிழ் நடிகர் விஜய் பற்றி தெலுங்கு நடிகரின் ரசிகர்கள் எப்படி பேசலாம் ? உங்களுக்கு விஜய் பற்றி பேச எந்த அருகதையும் இல்லை என அந்த மகேஷ் பாபு ரசிகரை சரமாரியாக இணையத்தில் தாக்கி வருகின்றனர் அஜித் ரசிகர்கள். தற்போது இந்த பதிவுகளை எல்லாம் கண்டு விஜய் அஜித் ரசிகர்கள் ஒன்று சேர்ந்து விட்டார்களா என எண்ணும் அளவிற்கு தோன்ற வைக்கிறது. மேலும் இந்த ரசிகர்களின் ஒன்று சேர்ப்பு தமிழ் சினிமாவிற்கும் நல்லதாகவே தெரிகிறது. ஆனால் இந்த நட்பு இன்னும் எவ்வளவு நாளைக்கு நீடிக்கும் என்பது கடவுளுக்கு தான் தெரியும். ஆனால் ஒரு வேறு மாநிலத்தின் ரசிகர்கள் நம்முடைய தமிழ் ஹீரோவை கலாய்க்கும் போது மற்றொரு தமிழ் ஹீரோவான அஜித் ரசிகர்கள் ஆதரவுக்கு வருவது சமூக வலைதளத்தில் நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது.

Spread the love

Related Posts

‘இந்துக்களை குறித்து ராசா பேசியதில் தவறு இருப்பதாக எனக்கு தெரியவில்லை” – சீமான்

இந்துக்களைப் பற்றி அவதூறாக பேசிய திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா தெரிவித்த கருத்து தற்போது பெரிய

பள்ளி மாணவர்களுக்கு சனிக்கிழமை விடுமுறை ? | அன்பில் மகேஷ் பொய்யாமொழி உறுதி படுத்த உள்ளதாக தகவல்

கடந்த இரண்டு வருடங்களாக கொரனாவின் தாக்கத்தினால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வந்தது. மாணவர்களை நலனுக்காகவும் ஆசிரியர்களின்

கிழிந்த ஜீன்ஸ் அணிந்தபடி முன்னழகை காட்டி போட்டோ போட்ட 20 வயது நடிகை ஷிவானி

நடிகை சிவானி நாராயணன் கிழிந்த ஜீன்ஸ் போட்டு கொண்டு முன் அழகை முழுவதும் ரசிகர்கள் முன்னலையில்

x