நடிகர் அஜித் தற்போது புத்தர் கோவில் வழிபாடு செய்யும் அவரது ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
சென்னையில் இருந்து விமானம் மூலம் லடாக் பயணித்து அங்கு பைக் டிராவல் செய்த அஜித்தின் போட்டோக்கள் வீடியோக்கள் சமூகவலைத்தளத்தில் பரவி மிகவும் வைரலாகி வருகிறது. அவரது அடுத்த படங்களின் அப்டேட்டுகளை விட அவர் பைக்கை எடுத்துக் கொண்டு எங்கு செல்கிறார் என்று அப்டேட் தான் உடனுக்குடன் வருகிறது. போனி கபூர் தயாரிப்பில் எச் வினோத் இயக்கத்தில் ஏகே 61 என்று பெயரிடப்படாத இந்த படத்திற்கு இதுவரை எந்த அப்டேட் வரவில்லை.

மேலும் இந்த கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்து இந்த படத்தை உருவாக்குகிறது. படத்தில் இவருக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சுவாரியர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அடுத்த வருடம் பொங்கலுக்கு இந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திரைப்படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பு நடந்து வருகின்றது.

இந்த நிலையில் இந்த படப்பிடிப்பில் இருந்து முன்னதாக அஜித் லடாக் பயணம் மேற்கொண்டார். அப்போது புத்த விகாரம் ஒன்றில் நடிகர் அஜித் வழிபாடு செய்யும் காட்சி இணையதளத்தில் வயலாக பரவியது. அஜித்தின் இந்த வீடியோ அவரது ரசிகர்களால் மிகவும் லைக் செய்யப்பட்டு ஷேர் செய்யப்பட்டும் வருகிறது.
Exclusive Video. #Ajith sir ❤️#AjithKumar #AK #AK61 pic.twitter.com/MHJQ26cL4F
— Ajith Network (@AjithNetwork) September 12, 2022