ட்விட்டரில் பயனர் ஒருவர் நடிகர் அஜித்குமார் கேதார்நாத் கோவிலுக்கு சென்று வந்ததை பதிவிட்டு, இந்து மத சம்பந்தமாக பேசிய சில விஷயங்களில் அஜித்தை குறிப்பிட்டு பேசியது சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.
அவர் அந்த பதிவில் போட்டிருப்பதாவது :- “அஜித் குமார் கேதார்நாத் கோவிலுக்கு சென்று இருக்கிறார்.
அடிக்கடி கோவிலுக்கு சென்று இந்து மதத்தினருடைய சடங்கை யாருக்கும் பயப்படாமல் நேரடியாக செய்துவரும் தமிழ் சினிமாவில் உள்ள ஒரே நடிகர் இவர்தான். இந்து மதத்தினர் உணர்வு புண்படும் வகையிலும் மத்த சாதியில் இருக்கும் மக்களை புண்படுத்தும் வகையில் நடந்து கொள்ளவே மாட்டார். 2006, 2011 காலகட்டத்தில் திமுகவை எதிர்த்து நின்ற ஒரே நடிகர் இவர்தான். மேலும் விஜய், சூர்யாவை போன்று அவருடைய படங்களில் கூட மற்ற மதத்தினரை தாக்கி பேச மாட்டார். அவருடைய படங்கள் இந்த ஐடியாலஜியில் இருந்து தனித்து நிற்கும்.

திராவிட சித்தாந்தத்தில் சிக்காமல் தனித்து நிற்கும் ஒரு சில தமிழ் நடிகர்களில் இவரும் ஒருவர். மேலும் முக்கியமானது தமிழ்நாட்டில் 2019 ஆம் ஆண்டில் டாப் 3 நடிகர்களில் இருந்தவர் அஜித். அந்த நேரத்தில் இவர் நினைத்திருந்தால் அவரின் ரசிகர் படையை அரசியலுக்காக மாற்றி இருக்கலாம். ஆனால் அவர் அப்படி செய்யாமல் தன்னுடைய ரசிகர் மன்றத்தை கலைத்தார். எந்த ஒரு சமூக வலைதள பக்கத்திலும் அவர் கிடையாது. அவர் எப்போதும் அவருடைய வழியிலேயே இருப்பார்.
அது ரேசிங் செல்வதாகட்டும் ஏரோ மாடலிங் ஆகட்டும் இந்த மாதிரி அவருடைய நோக்கம் எப்போதுமே அவரைப் பற்றி தான் இருக்கும். இவரைப் போன்ற ஆட்கள் நிறைய வரவேண்டும்” என அந்த பதிவை அவர் போட்டு இருக்கிறார். தற்போது இந்த பதிவு சிலரால் கலாய்க்கப்பட்டு வருகிறது. மேலும் ஒரு சில அஜீத் ரசிகர்களே அஜித்தை இதுபோன்று மத ரீதியான போஸ்ட்களில் பதிவிடாதீர்கள். அவர் எப்போதுமே அரசியலையும், சாதி மத வேறுபாடையும் களைத்து வாழ்பவர். அதனால் இப்படியான விஷயங்களில் அவரை ஈடுபடுத்தாதீர்கள். என பலரும் தற்போது இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Ajith Kumar visits Kedarnath temple. He is one rare Kollywood actor who doesn't engage in activism on screen, openly practicing Hindu, never insults Hindu sentiments or indulge in caste bashing like his peers & had guts to stand against DMK at peak of their 2006-11 rule. Class. pic.twitter.com/IdXqNPTxqw
— Cogito (@cogitoiam) September 15, 2022