23 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்றாக சேரும் ஜோடி | அடேங்கப்பா இது வேற லெவல் அப்டேட்டா இருக்கே!

அஜித் குமாரை வைத்து விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் ஐஸ்வர்யா ராய் நடிக்க போவதாக ஒரு தகவல் வெளியாக இருக்கிறது.

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் தான் அஜித் குமார். இவருக்கென ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. தற்போது இவர் வலிமை படத்தை அடுத்து அதே கூட்டணியுடன் வேறு ஒரு படத்தில் நடிக்கிறார். அந்த படத்திற்க்கு இன்னும் பெயரிடப்படாததால், தற்போது வரை AK 61 என அழைத்து வருகின்றனர். தற்போது அந்த படத்தின் இறுதி கட்ட படபிடிப்பு மிகவும் பிசியாக நடந்து வருகிறது. படப்பிடிப்பு செப்டம்பர் இறுதியில் முடிவடையும் எனவும் கூறி வருகின்றனர்.

இந்த படத்தில் சஞ்சய் தத் முக்கிய கதாபாத்திரத்தில் வருவதாகவும் மலையாள நடிகை மஞ்சு வாரியார் படத்தில் நடிப்பதாகவும் கூறி வருகின்றனர். இந்த படம் தளபதி விஜயின் வாரிசு படத்துடன் பொங்கலுக்கு களமிறங்கும் எனவும் நேற்று ஒரு அறிவிப்பு வந்திருந்தது. ஆனால் அது அதிகாரபூர்வ அறிவிப்பு அல்ல, அப்படி அது நடந்தால் 2014 பொங்கலுக்கு பிறகு 2023 பொங்கல் அன்று விஜய் அஜித் படங்கள் ஒன்றாக திரைக்கு வர இருக்கிறது என்று நிலைமை ஏற்படும். இதற்காக ரசிகர்களும் ஆவளுடன் காத்திருக்கின்றனர்.

தற்போது அவர் அந்த படத்திற்கு பிறகு விக்னேஷ் சிவன் உடன் ஏகே 62 படத்தில் நடிக்க உள்ளார். இந்த பழத்தின் பிரீ ப்ரோடக்சன் பணிகள் இப்போது மும்முரமாக நடந்து வருகிறது. படக்குழுவின் நெருக்கமான வட்டாரங்கள் மூலம் ஒரு சில சுவாரஸ்யமான தகவல்கள் வெளியே வந்திருக்கிறது. அதன்படி விக்னேஷ் சிவன் இயக்கும் இந்த படத்தில் அனிருத் இசையமைக்கிறார். லைக்கா ப்ரொடக்ஷன் இந்த படத்தை நல்ல பெரிய பட்ஜெட்டில் தயாரிக்க உள்ளதாக ஏற்கனவே அறிவிப்பு வந்திருந்தது.

தற்போது இதற்கு கூடுதல் பலமாக இன்னொரு அறிவிப்பும் வெளிவந்திருக்கிறது. இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராயை முதல் தேர்வாக முடிவெடுத்து இருக்கிறார்கள். என்பது தெரியவந்துள்ளது. அஜித் ஐஸ்வர்யா ராய் உடன் கடைசியாக கண்டு கொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love

Related Posts

முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று

தமிழக முதல்வர் மு க ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது இதை அடுத்து பொதுமக்களும்

எல்.பி.ஜி சிலிண்டர் விலை உயர்வு

எல்பிஜி சிலிண்டர் சமையல் எரிவாயுவின் விலை ஒவ்வொரு மாதமும் மாறிக்கொண்டே வருகிறது அதனடிப்படையில் போன மாதம்