நாங்க தான் டாப்… மீண்டும் ட்விட்டர் போரை தொடங்கிய அஜித் விஜய் ரசிகர்கள் | கலவர பூமியானது ட்விட்டர்

ரொம்ப நாளாக ஓய்வில் இருந்து அஜித் விஜய் ரசிகர்கள் மோதல் தற்போது ட்விட்டரில் வெடித்துள்ளது.

காரணம் என்னவென்றால் கடந்த 2013 ஆம் ஆண்டு al விஜய் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வெளியான படம் தான் தலைவா. இந்தப் படத்தில் விஜய் ஒரு மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். மேலும் இந்த படம் கலைவையான விமர்சனங்களை பெற்றாலும் ரசிகர்களுக்கு இந்த படம் எப்போதுமே ஒரு பிடித்த படம் தான். தற்போது இந்த படம் வெளியாகி ஒன்பது ஆண்டுகள் ஆகி உள்ளதால் அத கொண்டாட வேண்டும் என்ற வகையில் #9YrsofHistoricThalaivaa என்ற ஹாஷ்டாக் ட்ரெண்ட் செய்ய முடிவு செய்தனர்.

அதற்காக அவர்கள் திட்டம் தீட்டி டேக் கணக்கை மாலை 6 மணிக்கு நேற்று தொடங்கினர். தொடங்கியதிலிருந்து நல்ல வரவேற்பை பெற்று இந்தியாவின் முதல் இடத்தில் பிடித்தது. ஆனால் சற்றும் எதிர்பாராத வகையில் இதற்கு ஒரு பதிலடி கொடுக்க வேண்டும் என்பதற்காக வேண்டும் என்றே அஜித் ரசிகர்கள் தன்னுடைய நடிகரின் #AjithTheMonarchOfTN டேக் ட்ரெண்ட் செய்தனர். வீம்புக்காகவே இதை அஜித் ரசிகர்கள் செய்தனர். தலைவா டேக் விட அஜித் டேக் மேலே சென்று அதிக ட்விட்களை பெற்றது. தற்போது இதை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். நீங்க பிளான் பண்ணி செஞ்ச விஷயத்தை நாங்கள் பிளான் பண்ணமயே செஞ்சிட்டோம் என காலரை தூக்கிக் கொள்கின்றனர்.

“கார்க்கு குடுக்குற மரியாதை கூட மனுஷனுக்கு இல்லையா ?”… | மோடியை சரமாரியாக விளாசிய பொன்வண்ணன்

தற்போது இந்த யுத்தம் இதோடு முடியப்போவது அல்ல இதன்பிறகு அஜித் ரசிகர்கள் ஏதாவது பிளான் செய்து டேக் செலிப்ரேஷன் செய்தால் அதை கெடுக்க விஜய் ரசிகர்களும் இப்படித்தான் வருவார்கள். அதனால் இது ஒரு தடவையோடு முடியப் போவது கிடையாது. பீஸ்ட் மற்றும் வலிமை படங்கள் தொடர்ந்து நெகடிவ் விமர்சனங்களை பெற்றதால் அவர்களின் ரசிகர்களின் நொந்து போய் இருந்த இந்த நிலையில் மீண்டும் அவர்கள் களத்தில் இறங்கி ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொள்வது பல மாதங்களுக்கு பிறகு இதுதான் முதல் முறை. தற்போது இந்த ட்விட்டர் ஃபோர் சமூக வலைத்தளத்தில் வேகம் எடுக்கிறது. இதில் குறிப்பிடப்படவேண்டிய விஷய என்னவென்றால் இந்த சண்டை இன்னும் முடியவில்லை இன்று மாலை 6 மணி வரை தொடரும்

Spread the love

Related Posts

தேமுதிக தலைவர் விஜயகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற அன்புமணி | அன்புமணியின் அடுத்த திட்டம் தான் என்ன ?

பாமக கட்சியின் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள அன்புமணி ராமதாஸ் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவன

பிரபல இயக்குனர் லிங்குசாமிக்கு 6 மாதங்கள் சிறை தண்டனை

பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் லிங்குசாமிக்கு ஆறு மாத சிறை தண்டனை விதித்து சைதாப்பேட்டை நீதிமன்றம்

உணவுக்குழாயில் பிரச்னையாக இருக்கிறது என்று மருத்துவரிடம் சென்ற நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி | தொண்டையில் இருப்பது என்ன ? அதிர்ந்து போன மருத்துவர்கள்

கர்நாடக மாநிலத்தில் உணவுக்குழாயில் பிரச்னையாக இருக்கிறது என்று மருத்துவரிடம் சென்ற நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி தொண்டையில்

x