உடலை ஒழுங்காக மெயின்டைன் செய்ய மாட்டீங்களா என நடிகர் அஜித்தை கேள்வி கேட்கும் அவரது ரசிகர்களின் டிவிட்கள் இணையதளத்தில் குவிந்து வருகிறது.
ஒரு காலத்தில் நடிகர்கள் என்ன செய்தாலும் அவரின் ரசிகர்கள் அதற்கு ஆதரவு தெரிவித்து வந்தனர். உதாரணத்திற்கு சொல்ல வேண்டும் என்றால் ஒரு படம் மோசமாக இருந்தாலும் அந்த படத்திற்கு நல்ல விமர்சனங்களை தந்து இந்த படம் நல்ல படம் எல்லோரும் பாருங்கள் என மொக்கை படத்திற்கு சப்போர்ட் செய்வார்கள். ஆனால் தற்போது அந்த ட்ரெண்ட் செட் மாறியுள்ளது. படம் சரியாக இல்லை என்றால் அதை முதலில் ஒப்பு கொள்வது ரசிகர்களாக தான் இருக்கின்றனர்.
அஜித் மற்றும் விஜயின் முந்தைய படங்களான பீஸ்ட் மற்றும் வலிமை ஆகிய படங்கள் சரியாக இல்லை என தெரிந்ததும் ரசிகர்களே அந்த படங்களை திட்டி வந்தனர். இது இப்போதுதான் முதன்முதலாக நாம் காண்கிறோம். இதற்கு முன்பெல்லாம் அப்படி கிடையாது. அதனால் ரசிகர்கள் தற்போது பக்குவம் அடைந்து விட்டார்களா என்றும் கேள்வி எழுகிறது. ஆனால் இதையெல்லாம் பார்க்கும் போது அப்படி தான் தோன்றவும் வைக்கிறது.
வலிமை படத்தை நாம் எடுத்துக் கொண்டால் அதில் நல்ல ஆக்சன் காட்சிகளும், குடும்ப காட்சிகளும் நிறைந்தவையாக இருக்கும். ஆனாலும் அந்த படம் ஆடியன்ஸ்க்கு செட்டாகவில்லை. ஏனென்றால் அதற்கு முக்கிய காரணம் அந்த படத்தில் அஜித் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ளாமல் ஒரு ஒரு காட்சிகளிலும் ஒரு ஒரு உருவத்துடன் தோன்றுவது தான். போன காட்சியில் முகம் ஒல்லியாக தெரிந்த அஜித் குமார் முகம் அடுத்த காட்சியிலேயே பெரிதாக காணப்படும். இப்படி இந்த மாறுதல்கள் அவ்வப்போது இந்த படத்தில் நிகழும்.
கடைசியாக எப்போது உடலுறவில் ஈடுபட்டீர்கள் என கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த விஜய் தேவர்கொண்ட

அதற்கு காரணம் கொரோனா காலகட்டத்தில் சுமார் ஒரு வருடம் எல்லோரும் வீட்டிலேயே தங்கி இருப்பதால் எதர்ச்சியாக அந்த உடல் மாற்றம் பலருக்கு ஏற்படும். அதனால் நடிகர் அஜித்தை நாம் சொல்லவே வேண்டாம் ஏற்கனவே அவருடைய உடலில் தையல் போடாத இடமே இல்லை அப்படிப்பட்ட ஒருவருக்கு உடல் பருமன் ஆவது வாடிக்கையாக நிகழ்வது தான். ஆனால் அந்த நிகழ்வு படத்திலும் தெள்ளத் தெளிவாக தோன்றி காட்சியை கேடுக்கிறது. இதனாலேயே அந்த படத்திற்கு சொந்த ரசிகர்களிடம் இருந்தே ஏகப்பட்ட நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தது.
தற்போது வினோத் அஜித்தை வைத்து இயக்கும் அடுத்த படத்திலாவது இதை திருத்திக் கொள்வார்கள் என்று ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்த வேளையில் அந்த நிகழ்வு மீண்டும் நடந்திருக்கிறது. அது என்னவென்றால் இரண்டு, மூன்று மாதங்களுக்கு முன்பு AK 61 படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பில் நடித்த நடிகர் அஜித் உருவம் தற்போது இருக்கும் உருவமே கிடையாது. ஏனென்றால் அந்த நேரத்தில் அவர் உடல் அமைப்பு கொஞ்சம் பிட்டாகவும் நல்ல லுக்கிலும் இருந்தார். ஆனால் தற்போது அந்த லுக்கு மட்டும் தான் இருக்கிறது தவிர அந்த பிட்னஸ் இல்லை. முன்பு பார்த்த அஜித்தை விட தற்போது ஒரு சுத்து தொப்பை போட்டு இருக்கிறார்.
இன்று வரை விடைதெரியாத 5 மர்மமான புகைப்படங்கள்

இந்த வீடியோ நேற்று மாலை இணையதளத்தில் வெளியாகி வைரலானது இந்த வீடியோவினை கண்டு அஜித் ரசிகர்கள் ஷாக் ஆகிவிட்டனர். என்னடா வலிமை படத்தில் தான் இந்த தவறு ஏற்பட்டது என்றால் தற்போது அடுத்த படத்திலும் இந்த தவறு தொடர்கிறது என வருத்தத்தில் இருந்தனர். ஏனென்றால் அவர்களுக்கு அவரின் நடிகரை நல்ல பிட்னஸ் உடன் ஒரு ரோலில் பார்க்க ஆசையாக உள்ளனர். ஆனால் அவரும் பிட்னஸ் மெயின்டைன் செய்யாமல் ஊர் சுற்றி வருகிறார் என அவரின் ரசிகர்களே அவர் மேல் கோபத்தினை வெளிப்படுத்தி வருகின்றனர்.
துப்பாக்கி சுடுதல் போட்டிக்காக திருச்சிக்கு வந்திருக்கும் நடிகர் அஜித் | மேலும் புகைப்படங்கள் உள்ளே
படத்திற்கு தேவை என்பதால் தான் உடலை ஏற்றியும் இறக்கியும் படப்பிடிப்பில் நடிக்கிறார் அஜித், அதனால் படம் வரும் வரை நீங்கள் காத்திருந்து படத்தை பாருங்கள் வினோத் நிச்சயமாக இந்த படத்தில் நன்றாக அஜித்திடமிருந்து வேலை வாங்கியிருப்பார் என சில ரசிகர்கள் கூறி வருகின்றனர். அதனால் நாம் இப்போது பேசுவதை விட படம் வந்தால் அஜித்தின் தோற்றம் எப்படி இருக்கிறது என்று பேசிக்கொள்ளலாம். அந்த படம் வரும்வரை நாம் காத்திருந்து அதற்கு பின் தங்களுடைய கருத்துக்களை கூறுவதே நல்லது என சில விஜய் ரசிகர்களே அஜித் ரசிகர்களுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.
Exclusive Video of #Ajithkumar sir today at Rifle Club, Chennai 🔫 #AK61 pic.twitter.com/fRzxYBkxTC
— 𝚃𝙽 𝙰𝙺 𝙴-𝙵𝙰𝙽𝚂 (@tn_ajith) July 26, 2022