திருச்சியில் துப்பாக்கி சுடுதல் போட்டிக்காக சென்றிருந்த அஜித்குமார் அங்கு நான்கு தங்க பதக்கங்களுடன் சேர்த்து ஆறு பதக்கங்களை வென்றிருக்கிறார்.
திருச்சி மாவட்டத்தில் 47வது மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டி திருச்சி மாநகர் கேகே நகர் ஆயுதப்படை வளாகத்தில் உள்ள திருச்சி ரெபில் கிளப்பில் நடைபெற்று வருகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தரம் பிரிக்கப்பட்டு 16 வயது, 19 வயது, 21 வயது, 21 முதல் 45 வயது வரை மற்றும் மாஸ்டர் வகை 47 வயது, கடைசியாக 60 வயது என இப்படி தனித்தனியாக பிரித்து போட்டிகள் நடத்தப்பட்டது.
கடந்த 27 ஆம் தேதி தொடங்கிய இந்த போட்டி நாளை (31.07.22) வரை நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் இருந்து துப்பாக்கி சுடுதல் பயிற்சி பெற்ற 1300 போட்டியாளர்கள் இதில் கலந்து கொண்டனர். இந்த போட்டிக்காக கலந்து கொள்ள வந்த அஜித் 27 ஆம் தேதி திருச்சிக்கு வந்தார். அப்போது அங்கு மாஸ்டர் பிரிவில் இவர் பங்கேற்றார். அதில் 10 மீட்டர், 25 மீட்டர், 50 மீட்டர் என மூன்று சுடுதலத்திலும் பிஸ்டல் பிரிவு போட்டிகளில் கலந்து கொண்ட இவர் இலக்கை நோக்கி வெற்றிகரமாக சுட்டார். இதை அடுத்து பல்வேறு போட்டிகளில் அன்றைய தினம் பங்கேற்ற அஜித்குமார் இரவே திருச்சியில் இருந்து சென்னைக்கு புறப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

தற்போது அந்த துப்பாக்கி சுடுதல் போட்டிக்கான வெற்றி பெற்றவர்களின் பட்டியலை நேற்று முன்தினம் அறிவித்தனர். அப்போது ஓய்வு பெற்ற டி.ஜி.பி தேவாரம் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்களை வழங்கினார். இதில் மொத்தம் 162 பேர் பதக்கங்கள் வென்றனர். இதில் நடிகர் அஜித்குமார் சென்டர் பயர் பிஸ்டல் மாஸ்டர் ஆண்கள் அணி பிரிவில் தங்கப் பதக்கமும், ஸ்டாண்டர்ட் பிஸ்டல் மாஸ்டர் ஆண்கள் அணி பிரிவில் தங்க பதக்கமும், 50 மீட்டர் பிரீ பிஸ்டல் மாஸ்டர் ஆண்கள் அணி பிரிவில் தங்கப் பதக்கமும், ஸ்டாண்டர்ட் பிஸ்டல் மாஸ்டர் ஆண்கள் அணி பிரிவில் தங்க பதக்கமும், 50 மீட்டர் பிரீ பிஸ்டல் ஆண்கள் அணி பிரிவில் வெண்கல பதக்கமும், ஸ்டாண்டர்ட் பிஸ்டல் ஆண்கள் அணி பிரிவில் வெண்கல பதக்கமும் என நாலு தங்கம் மற்றும் இரண்டு வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் ஆறு பதக்கங்களை நடிகர் அஜித் குமார் பெற்றார்.

இதனை கொண்டாடும் வகையில் அவரின் ரசிகர்கள் வெற்றி நாயகன் அஜித் என டேக் ட்ரெண்ட் செய்து டிவிட்டரில் தெறிக்க விட்டு வருகின்றனர். பேருக்கும் பப்ளிசிட்டிக்கும் கலந்து கொண்டு போகுபவராக இல்லாமல் இத்தனை பதக்கங்களை வென்றது அஜித்குமார் என்றால் யார் என காட்டுகிறது. எனவே திரையில் மட்டும் நாயகனாக இல்லாமல் தரையிலும் நாயகனாக இருந்து ஆறு பதக்கங்களை வென்ற அவருக்கு நம்முடைய சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ளலாம்.
ஸ்லீவ்லேஸ் ஜாக்கெட்…. ட்ரான்ஸ்பிரேண்ட் சாரி …. இணையத்தை சூடேற்றும் நடிகை நிதி அகர்வால்