ஏகே 61 படத்திற்கான வங்கி செட் வீடியோ வெளியாகி இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது.
ஏகே 61 படப்பிடிப்பு தளத்திலிருந்து பேங்க் செட்டப் போன்று செட் செய்ய பட்டிருக்கும் கட்டடிடத்தின் வீடியோ வெளியாகி இருக்கிறது. லண்டனில் ஒரு மாத காலமாக பைக் சுற்று பயணம் சென்ற அஜித்குமார் தற்போது தான் சென்னை திரும்பி படப்பிடிப்புகளில் கவனம் செலுத்த உள்ளார். அவர் சென்னை வந்தது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. பெயர் வைக்கப்படாத இந்த படத்திற்கு தற்போது ஏகே 61 என்று தற்காலிக பெயரை வைத்து மேலும் இது தொடர்பான வீடியோ ஒன்றும் வெளியாகி வருகிறது.
துப்பாக்கி சுடுதல் போட்டிக்காக திருச்சிக்கு வந்திருக்கும் நடிகர் அஜித் | மேலும் புகைப்படங்கள் உள்ளே
அதாவது சென்னை மவுண்ட் ரோட்டில் இருக்கும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா கட்டிடம் போலவே ஒரு செட்டாக யுவர் பேங்க் என்ற பெயரில் ஒரு செட்டை உருவாக்குயிருகின்றனர். மேலும் அங்கு போலீஸ் டிரஸ் அணிந்த ஒரு துணை நடிகரும் துப்பாக்கியுடன் நிற்கிறார். அஜித் இந்த படத்தில் ஹீரோவாக நடித்த வில்லன் கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கிறார் என கூறப்படுகிறது.

மேலும் படத்தின் ஹீரோயினாக மலையாள நடிகை மஞ்சு வாரியார் நடிப்பதாக கூறப்படுகிறது. இதில் பல முக்கிய நடிகர்கள் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்படும் என தோன்றுகிறது. மேலும் இந்த படத்திற்கான டைட்டில், மோஷன் போஸ்டர், டிரைலர், ஆடியோ ரிலீஸ் தேதி, உள்ளிட்டவை இனிமேல் வெளியாகும் என பேசப்படுகிறது.
