திருமணம் நடந்த இரண்டு மாதத்தில் தான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை குதூகலப்படுத்தியிருக்கிறார் ஆலியா.
நடிகை ஆலியா பட்டுடன் நடிகர் ரன்பீர் கபூர்க்கு கடந்த மாதம் ஏப்ரல் 14ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இவர்களின் திருமணம் வெறும் குறிப்பிட்ட நபர்களை மட்டும் வைத்து சிம்பிளாக நடத்தினர்.
இவர்கள் இருவருக்கும் காதல் திருமணம் நடைபெற்றது. நடிகை ஆலியா பட்டு ரன்பீர் கபூரை வளைத்து வளைத்து காதலித்து பின்னர் தனது காதலை அவரிடம் வெளிப்படுத்தி கல்யாணம் வரை கொண்டு சென்று இருக்கிறார் என்றும் கூறுகின்றனர். இவர்களுக்குள் சுமார் பத்து வயது கேப் இருக்கிறது. அதாவது நடிகர் ரன்பீர் கபூர் தனது மனைவி ஆலியாவை விட பத்து வயது பெரியவர்.

அலியாவின் கங்குபாய் கத்தியவாடி படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத்தந்தது. அதிலிருந்து ஆலியா பட்டின் மார்க்கெட்டும் உயர்ந்துள்ளது. தற்போது ரன்பிருக்கு சமசீரா படமும் மற்றும் இவர்கள் இருவரும் இணைந்து நடித்த பிரம்மாஸ்திரம் படமும் வெளியாக உள்ளது. இந்த இரண்டு படங்களும் ட்ரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றது. ஆகையால் இவர்கள் புகழின் உச்சியில் இருக்கும் நேரத்தில் இந்த குழந்தை பிறக்கப் போகிறது என்ற செய்தியை அறிந்து அவர்களும் அவர்களது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

மேலும் இவர்களுக்கு திருமணம் ஆகி இரண்டு மாதங்களே ஆகியுள்ளது. ஆனால் எப்படி அதற்குள் ஸ்கேன் செய்து குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளனர் என்ற கேள்வி ரசிகர்கள் இடையே எழுந்த வண்ணம் உள்ளது. ஏனென்றால் ஒரு குழந்தை வயிற்றில் இருப்பதை ஸ்கேன் செய்து பார்க்க கிட்டத்தட்ட 14 முதல் 15 வாரங்கள் ஆகும். அதாவது மூன்றரை மாதங்கள். ஆனால் இரண்டு மாதங்களிலேயே எப்படி இவர்கள் அந்த ஸ்கேன் போட்டோவை சோதித்து பார்த்தனர் என சந்தேகம் எழலாம். அதனால் கல்யாணத்திற்கு முன்பு இவர்களுக்குள் உறவு ஏற்பட்டிருக்கலாம் எனவும் சிலர் கூறுகின்றனர். எப்படி இருந்தாலும் இந்த தம்பதியினருக்கு குழந்தை பிறக்கப் போகிறது என்பதை அறிந்த ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். அதனால் இந்த தம்பதிக்கு வாழ்த்துக்கள்.