“இரவு உணவுக்கு வீட்டுக்கு வா….” என்று நடிகை அமலா பாலை அழைத்தவர் மீது குற்றப்பத்திரிகை ரத்து செய்ய முடியாது என நீதிமன்றம் தீர்ப்பு

நடிகை அமலாபால் தொழிலதிபர் மீது கொடுத்த புகார் மனு தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.

சிந்து சமவெளி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பின்னர் மைனா, தலைவா, தெய்வத் திருமகள் போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகையாக வலம் வந்தார் அமலா பால். இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மலேசியாவில் நடைபெற்ற “டாஸ்லின் தமிழச்சி” என்ற நிகழ்ச்சியில் பங்கேற்க இருந்தார். அந்த நிகழ்ச்சிக்காக சென்னை தி நகரில் ஸ்ரீதர் என்பவர் நடத்தி வரும் “மான்ஜான்ஸ்” டான்ஸ் பயிற்சி பள்ளியில் அமலாபால் பயிற்சி எடுத்தார்.

அப்போது அழகேசன் என்பவர் அமலாபாலிடம் நீங்கள் மலேசியாவிற்கு செல்லும் முன்பு இப்ராகிம் என்பவருடன் இரவு உணவு அருந்தி விட்டு செல்லுங்கள் எனக் கூறியுள்ளார் இதனால் ஆத்திரமடைந்த அமலாபால் கடந்த 2018ஆம் ஆண்டு இதுகுறித்து டி நகர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு தெரிவித்தார். அவர்கள் அப்போது வழக்கு பதிவும் செய்திருந்தனர்.

“இந்த பாடத்தை டான் சொல்கிறது …..” டான் படத்தை பார்த்து விட்டு பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியது என்ன ?

அதனால் இந்த வழக்கில் ஸ்ரீதர், அழகேசன், பாஸ்கர், இப்ராகிம் ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டது. மேலும் இந்த வழக்கின் குற்றப்பத்திரிகை சைதாப்பேட்டை 4-வது குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மேலும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சைதாப்பேட்டையை சேர்ந்த தொழிலதிபர் பாஸ்கர், ஸ்ரீதரன் மீதான வழக்கு விசாரணைக்கு தடை கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

அதில் அவர்கள் இந்த நிகழ்விற்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஆனாலும் வேண்டுமென்றே போலீசார் எங்களின் பெயரையும் இதில் சேர்த்துள்ளனர். எனவே எங்களை இதில் இருந்து விடுவித்து வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியிருந்தனர். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் வழக்கு விசாரணைக்கு தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.

தற்போது மீண்டும் இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதி குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய முடியாது எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து விட்டார்.

Spread the love

Related Posts

“தமிழகத்தின் முதல்வராக டாக்டர் கலைஞர் தான இருக்கிறார் ?” கன்பியூஸ் ஆகி உளறிய அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு

தமிழகத்தின் முதல்வராக டாக்டர் கலைஞர் தான இருக்கிறார் என பேசி தற்போதுநெட்டிசன்களிடம் வாங்கி கொட்டிக்கொண்டு வருகிறார்

பெற்றோர்கள் வேலைக்கு போகச் சொன்னதால் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை | திருவள்ளூரில் பரபரப்பு – செய்திகள்

பெற்றோர்கள் வேலைக்கு செல்லும்படி வற்புறுத்தியதால் இளம் பெண் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட

“நிர்வாணமா… குனிய வெச்சு கும்மாங்குத்து குத்துறாங்க” | லெட்டர் மூலம் கதறிய நடமாடும் நகை கடை ஹரி நாடார்

பெங்களூருவில் குற்றப்பிரிவு போலீசார் என்னை முழு நிர்வாணப்படுத்தி லத்தியால் அடித்து துன்புறுத்துகின்றனர் என 64 பக்கத்திற்கு

x