நடிகை அமலா பால் தென்னிந்திய திரை உலகில் ஒரு உச்ச நட்சத்திரம் ஆவார். இவர் தமிழில் விஜய், விக்ரம், தனுஷ் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.
2014 ஆம் ஆண்டு இவரின் நடிப்பில் வெளியான தலைவா படம் மூலம் அந்த இயக்குனர் ஏ.எல்.விஜய் யை காதலித்த திருமணம் செய்து கொண்டார். ஆனால் அந்த திருமணம் வெகு நாட்கள் நீடிக்கவில்லை உடனே இவர்கள் இருவரும் பிரிந்தனர். தற்போது சிங்கிளாகவே வாழ்க்கையை ஓட்டி வரும் அமலா பாலுக்கு ஒரு பிரச்சனை அவரது முன்னாள் காதலர் மூலமாக எழுந்துள்ளது.
பேருந்தில் படிக்கட்டில் பயணம் செய்த மாணவன் திடீரென நிலை தடுமாறி கீழே விழும் பரபரப்பான வீடியோ காட்சி

இந்த நிலையில் அமலாபாலின் முன்னாள் காதலர் பவீந்தர் சிங் இவருக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக அமலா பாலின் மேலாளர் போலீசில் புகார் அளித்தார். பவீந்தர் சிங் ராஜஸ்தானை சேர்ந்தவர். இவர் விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் பகுதியில் அமைந்துள்ள அமலாபாலின் வீட்டில் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், மேலும் பணமோசடிகளிலும் ஈடுபட்டிருக்கிறார் என தகவல் வெளிவந்திருக்கிறது.
நீதிமன்றத்திற்கு அல்வா கொடுத்து விட்டு தலைமறைவான மீரா மிதுன் | போலீசார் வலைவீச்சு
இதன் பெயரில் தனது முன்னாள் காதலர் மீது போலீசில் புகார் அளித்தவுடன் அந்த புகாரின் பேரில் அவரை உடனடியாக போலீசார் கைது செய்தனர். அவரிடம் இது குறித்து விசாரிக்கையில் 11 பேர் இதில் தொடர்புடையதாக தெரியவந்துள்ளது. மேலும் அவர்களையும் தேடி வருவதாக போலீசார் தெரிவித்து இருக்கின்றனர்.
