நடிகர் ரன்வீர் சிங்கின் ஆடை இல்லா போட்டோவுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக அமெரிக்காவை சேர்ந்த மாடல் அழகி அமன்டா செர்னி தன்னுடைய ஆபாச வீடியோவையும் இணையத்தில் வெளியிட்டு பரபரப்பு கிளப்பி உள்ளார்.


நடிகர் ரன்வீர் நடத்திய நிர்வாண போட்டோ சூட் தான் தற்போது இணையதளம் முழுவதும் ட்ரெண்டிங்கில் இருக்கிறது. ஒவ்வொரு திரைப்படத்திலும் தன்னுடைய பன்முக நடிப்பால் ரசிகர்களை ஈர்த்தவர். சினிமாவில் நடிக்கும் அதே சமயம் அவருக்கு மாடலிங்கிலும் தனி ஆர்வம் உண்டு.
அதற்காக அவர் அவ்வப்போது போட்டோஸ் எடுப்பதும் வழக்கம். அதற்காக தனது ஹேர் ஸ்டைலை மாற்றுவது ட்ரெஸ்ஸிங் என பல வெரைட்டி காட்டுவார். அந்த வகையில் சமீபத்தில் நடந்த ஒரு போட்டோ சூட்டில் அவர் நிர்வாணமாக நின்று அவரின் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். முன்னதாக 1972 ஆம் ஆண்டு காஸ்மோ போலிடன் இதலுக்காக ஹாலிவுட் நடிகர் பேட் ரெனால்ட்ஸ் கொடுத்த புகழ்பெற்ற நிர்வாண போட்டோஸ் நினைவுக்கு வரும் வகையில் ரன்வீர் இந்த நிர்வாண போட்டோ சூட்டை நடத்தி இருந்தார்.

என்னதான் இவர் செய்ததை துணிச்சல் என்று பலர் சொன்னாலும் சிலர் மீம்ஸ்கள் போட்டு ரன்வீரை காயப்படுத்தி வருகின்றனர். அதனால் அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக அமெரிக்க மாடல் அமண்டா செர்னி செய்த காரியம் தற்போது இணையத்தை சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. அதில் மாடலிங் அழகி அமன்டா செர்னி ஒரு மளிகை கடைக்கு செல்லும் போது எந்த ஆடையும் இல்லாமல் அங்கு வீடியோவை எடுத்து அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் twitter பக்கத்திலும் பகிர்ந்துள்ளார். மேலும் இவர் பதிவிட்ட கேப்ஷனில் “ஹேக் செய்ய வேண்டாம்” எனவும் பதிவிட்டுள்ளார். இவரின் இந்த நிர்வாண வீடியோவும் தற்போது வைரல் ஆகி வருகிறது.
Justice for Ranveer?🫶😂 pic.twitter.com/GxSWPwxaOA
— Amanda Cerny (@AmandaCerny) July 29, 2022