இந்திய பிரதமர் நரேந்திர மோடியை அம்பேத்கருக்கு நிகரானவர் என்று இசையமைப்பாளர் இளையராஜா பேசியது தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
அம்பேத்கரும் மோடியும் என புத்தக வெளியீட்டு விழா நடந்தது மேலும் அந்த புத்தகத்திற்கு அவர் முன்னுரை எழுதி இருப்பது குறிப்பிடத்தக்கது. அதில் கலந்து கொண்டார் இளையராஜா. அதில் பேசிய அவர் “தற்போது மோடியின் ஆளுமைத் திறனைப் பார்த்து அம்பேத்கர் இருந்திருந்தால் அவரே பெருமை கொள்வார்” என பேசியிருந்தார்.

மேலும் பேசிய அவர் “குழந்தைகளை காப்போம் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற திட்டம் மற்றும் முத்தலாக் முறைக்கு எதிரான சட்டம் என மோடி பெண்களின் வாழ்வில் ஏற்படுத்தியுள்ள காலமாற்றத்தை அம்பேத்கர் பார்த்தால் அவர் பெருமை கொள்வார், இருவருமே இந்தியா வல்லரசு ஆகா வேண்டும் என கனவு கண்டவர்கள், அதோட மட்டுமில்லாமல் அவர்களின் செயலின் மீதும் நம்பிக்கை கொண்டவர்கள்” என்று பேசியிருந்தார்.
