தஞ்சாவூர் மாவட்டத்தில் அன்பில் மகேஷ் வருகைக்காக தீவிரமாக சென்று கொண்டிருந்த ஆம்புலன்ஸை
நிறுத்திவிட்டு அன்பில் மகேஷ் வாகனத்திற்கு வழிவிட்ட ஒரு வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த காரணத்தால் கும்பகோணம் அருகே கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரையோர பகுதி மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது. அதனால் அவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு தஞ்சமடையுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த மீட்பு பணிகளுக்கு மீட்பு பணியாளர்களும் அதிகாரிகளும் தயாராக உள்ளனர்.

இந்த நிலையில் இதனை பார்வையிட சென்ற பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் அங்கு நேரில் சென்ற போது அரசு அதிகாரிகள் மற்றும் கட்சி பிரமுகர்கள் என 25 பேருடன் காரில் சென்றார். அப்போது பாலத்தின் மறுபக்கத்தில் நின்ற ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்று வந்தது. அதற்கு வழி விடாமல் நீண்ட நேரம் காக்க வைத்து அன்பில் மகேஷ் அவர்களின் வாகனங்கள் செல்லும் வரை காக்க வைத்துள்ளனர்.

ஆனால் அமைச்சர் வாகனம் வரும் வரை ஆம்புலன்ஸ் காக்க வைக்கப்பட்டது இல்லை அதிகாரிகளின் தலையீடு தான் இதற்கு காரணமாக இருக்கும் எனவும் சிலர் கூறி வருகின்றனர். இந்த விஷயம் அமைச்சருக்கு தெரியாமல் தான் நடந்திருக்கும் என்றும் தேவை இன்றி அவரை சர்ச்சையில் சிக்க வைக்க பார்க்கிறார்கள் என்றும் மேலும் அது ஒரு வழி பாதை அமைச்சரின் வாகனங்கள் சீக்கிரமாக அந்த பாதையில் நுழைந்து விட்டதால் அதன்பிறகு மருபக்கதிலிருந்து வரும் வாகனங்கள் சென்றால் நெரிசல் ஏற்படும் என்ற காரணத்திற்காகவே இந்த வாகனத்தை நிறுத்தி வைத்து அமைச்சரின் வாகனம் சென்றது அதனால் இதில் திட்டமிட்டு நடத்தப்பட்ட தவறு ஏதும் இல்லை எனவும் திமுக உடன் பிறப்புகள் கூறி வருகின்றனர்.
திமுக அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் தொண்டரடிப்பொடியினர் செல்லும் வரையில் ஆம்புலன்ஸைக் காத்திருக்க வைத்திருக்கின்றனர். இதான் விடியல் அரசின் லட்சணம் pic.twitter.com/EGy0ebLkzz
— kishore k swamy 🇮🇳 (@sansbarrier) August 8, 2022