“அமிட்ஷா-வே ஒரு குற்றவாளி…” செய்தியாளருக்கு நெத்தியடி பதிலளித்த இயக்குனர் அமீர்

செய்தியாளர் கேட்கப்பட்ட கேள்விக்கு இந்தியாவின் உள்துறை அமைச்சரே ஒரு குற்றவாளி தான் என பேசி இருக்கும் வீடியோ இணையத்தில் சுற்றி வருகிறது.

இயக்குனரும் மற்றும் நடிகருமான அமீர் சூர்யாவின் மௌனம் பேசியதே படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். முதல் படத்திலேயே பின்னி பெடல் எடுத்த இவர் அடுத்தடுத்து ராம், பருத்திவீரன் போன்று பிளாக்பஸ்டர் படங்களை எடுத்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வளர்த்துக் கொண்டார். பிறகு வெற்றிமாறன் இயக்கத்தில் 2017 இல் வெளியான வடசென்னை படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றி அனைத்து ரசிகர்களையும் கவர்ந்தார். அதில் அமீர் பேசும் வசனங்கள் இன்றளவு கூட ரசிகர்கள் மத்தியில் பேமஸ் ஆக உள்ளது.

அந்த அளவிற்கு ஒரு பிரபலமான இயக்குனர் இந்தியாவின் உள்துறை அமைச்சரே ஒரு குற்றவாளி என தற்போது பேசியிருக்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. செய்தியாளர் கேட்கும் போது தற்போது குஜராத்தில் கற்பழிப்பு சம்பவத்தில் ஈடுபட்டிருந்த எட்டு பேர் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும் அந்த ஊர் எம்.எல்.ஏ ஐந்து பேரை கூட வெட்டுங்கள் நான் ஜாமீன் எடுத்து தருகிறேன் என்று பகிரங்கமாக கூறுகிறார். இதையெல்லாம் நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் நம்முடைய நாடு எப்படி செல்கிறது என அவர்களிடம் கேட்டபோது,

நம்முடைய நாட்டின் உள்துறை அமைச்சரே ஒரு குற்றவாளி தான் அதனால் பிஜேபியை நீங்கள் சீரியஸாக நினைக்காதீர்கள் குற்றவாளிகளின் கூடாரமே பிஜேபி தான். சவுராபுதீன் என்கவுண்டர் வழக்கில் இரண்டு ஆண்டுகள் ஜெயிலில் இருந்து வந்தவர் தான் தற்போதைய இந்தியாவின் உள்துறை அமைச்சர். அதனால் பிஜேபியை பற்றி சீரியஸாக எடுத்துக் கொள்ளாதீங்க என்று நக்கலாக பதில் அளித்துவிட்டு சென்றார் தற்போது இது வைரலாகி வருகிறது.

“சந்தேகம் ஏதும் இல்லாததால் ஜெ-வின் வீட்டிற்கு சென்று ஆய்வு நடத்தவில்லை” – ஆறுமுகசாமி ஆணையம் அறிவிப்பு

Spread the love

Related Posts

புதிய பி.எம்.டபிள்யூ பைக்கீல் மாஸ் காட்டும் மாஸ் இயக்குனர் வெற்றிமாறன் | கசிந்த புதிய போட்டோ

தமிழ் சினிமாவில் ஒரு பிஸியான இயக்குனர் என்றால் வெற்றிமாறன் என்று சொல்லலாம் அவர் கை வைத்த

நாளை ஒரே நாளில் வெளியாகப்போகும் தல-தளபதி படத்தின் Update | சோசியல் மீடியா என்ன ஆகப்போகுதோ | கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

நடிகர் அஜித் நடிப்பில் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் தான் வலிமை. இந்த படத்தை

விஜய் பிறந்தநாளையொட்டி கோவையில் வானதி ஸ்ரீநிவாசன் தலைமையில் விஜய் ரசிக மன்ற நிர்வாகிகள் பாஜகவில் இணைந்தனர் | காரணம் என்ன ?

விஜய் பிறந்த நாள் அன்று விஜய் ரசிகர்கள் வானதி சீனிவாசன் தலைமையில் பாஜகவில் இணைந்தனர். தற்போது