ராட்சசன் படத்தின் மூலம் பிரபலமான அம்மு அபிராமிக்கு திருமணம் எப்போது என ரசிகர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் பல நடிகைகள் crush மெட்டீரியலாக ரசிகர்களுக்கு இருந்து வருகின்றனர். இந்த ட்ரெண்ட்டை முதன்முதலாக தொடங்கியது நஸ்ரியா தான். அப்போதிருந்து நஸ்ரியாவுக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டவர்கள் இருக்கிறது. யாரை கேட்டாலும் நான் நஸ்ரியாவின் ரசிகன் என்று கூறுவார்கள் இபோது அவருக்கு திருமணம் ஆனதோ அப்போதே அவரது ரசிகர்கள் மன உளைச்சலில் இருந்தனர்,
தற்போது அந்த லிஸ்டில் அம்மு அபிராமியின் பெயரும் இடம் பெறும், ராட்சசன் படத்தில் அந்த கதாபாத்திரத்தின் பெயரை முன்னால் அம்மு என்று சேர்த்துக் கொண்டு அம்மு அபிராமி ஆனார்.
மேலும் அந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் அசுரன் படத்தில் நடித்தார். தனுஷுடன் இணைந்து நடித்த இந்த படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அதுவும் கத்திரி பூவழகி பாடலில் இவரின் தோற்றம் ரசிகர்களை கவர்ந்தது.

மேலும் இவர் சமீபத்தில் குக் வித் கோமாளி சீசன் 3 யில் கலந்து கொண்டார், நல்ல இளமையான தோற்றம் கொண்ட இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகமாக எதிரி கொண்டே போகிறது. தற்போது யானை படத்திற்கு பிறகு அபிராமி பேட்டரி, நிறங்கள் மூன்று, காரி, ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தான் நான் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர் கேட்டுள்ள கேள்விகளுக்கு பதில் அளித்த அபிராமி திருமணத்தை குறித்து சிலர் கேள்வி எழுப்பியிருக்கின்றனர். அதற்க்கு பதிலளித்த அவர் :- “நிறைய பேர் என்னுடைய திருமணத்தைப் பற்றி கேள்வி எழுப்புகிறீர்கள், திருமணத்தைப் பற்றி நிறைய கனவுகள் எனக்கு இருக்கு அனால் எனக்கு இப்பொது வயது 22 தான் எப்போது எனக்கு திருமணம் செய்து கொள்ள தோன்றுகிறது, அப்போது அதை பற்றி நான் தெரிவிக்கிறேன்” என்று அதை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
