ரஷ்யா மற்றும் உக்ரைனில் தற்போது நடந்து கொண்டிருக்கும் போரில் இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா நடத்திவரும் போர் தற்போது ஆறு நாட்களுக்கு மேலாகியும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அதற்கு ஒரு முடிவு என்பதே இல்லை என்னதான் உக்ரைன் பேச்சுவார்த்தைக்கு வந்தாலும் ரஷ்யா அதை ஏற்க தயாராக இல்லை. பல்வேறு உலக நாடுகள் ரஷ்யா மீது கண்டனங்களை வைத்தாலும் அதற்கு செவி சாய்க்காமல் இவர்கள் ஒருபுறம் போரை நடத்திக் கொண்டே தான் வருகின்றனர். எந்த கோணத்திலும் பின்வாங்குவதாக தெரியவில்லை.
இந்த சூழலில்தான் கீவ் நகரில் அருகே ரஷ்ய ராணுவ படைகள் நெருங்கியுள்ளது. இந்தப் படைகள் வரிசையாக 40 மைல்கள் தொலைவுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
இந்த நிலையில் கிவ் உக்ரைனில் நடந்து வரும் ரஷ்ய ராணுவ நடவடிக்கைக்கு மத்தியில் இப்போது கெர்சன் நகரை ரஷ்ய ராணுவம் தாக்க தொடங்கியுள்ளது.
தற்போது போர் மிகவும் தீவிரம் அடைந்து இருக்கும் இந்த நிலையில் அங்கே சிக்கியிருக்கும் இந்திய மக்கள் மற்றும் இந்திய மாணவர்களை மீட்பதற்காக நமது இந்திய அரசு பல வகையான தீவிர முயற்சிகளையும் திட்டங்களையும் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில்தான் ஆபரேஷன் கங்கா என்று பெயர் வைத்து அதன் மூலம் உக்ரேனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க 4 மத்திய அமைச்சர்களுக்கு அனுப்பப்பட்டனர் இது இப்படி இருக்க உக்ரைன் தலைநகர் கீவ் வில் உள்ள இந்தியர்களை உடனே வெளியேற்றுமாறு இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
ஆனால் எதிர்பாராதவிதமாக இதை நிலையில் இந்திய மாணவர் ஒருவர் அங்கு உயிர் இழந்துள்ளார் இந்த சம்பவம் இப்போது இந்தியாவிலேயே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது போரில் மாண்ட அந்த மாணவர் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த நவீன் என்று தெரியவந்துள்ளது.
