பேரரறிவாளன் விடுதலை | ஸ்டாலின் மற்றும் அண்ணாமலை என்ன சொல்கின்றனர்

30 ஆண்டுக்கும் மேலாக சிறையில் இருந்து தற்போது உச்சநீதிமன்றத்தால் விடுதலையாகி இருக்கும் பேரறிவாளனுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்க முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் டுவிட்டர் பக்கத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கை வெளியீட்டின் போது அவர் கூறியதாவது :- “30 ஆண்டுகளுக்கும் மேலான சிறைவாசத்திலிருந்து விடுதலைக் காற்றை முழுமையாகச் சுவாசிக்க உள்ள பேரறிவாளனுக்கு எனது வாழ்த்துகளும் வரவேற்பும்.

ஒரு துளி நியாயமான கண்ணீருக்கு எதையும் வெல்லும் திறன் உண்டு எனத் தாய்மையின் இலக்கணமாக நின்றுள்ளார் அற்புதம் அம்மாள் என்னும் அயராத போராளி!…. #Perarivalan வழக்கின் தீர்ப்பு என்பது மனிதவுரிமை அடிப்படையில் மட்டுமல்லாமல், மாநில உரிமை சார்ந்தும் வரலாற்றில் இடம்பெறத்தக்கது…மாநில அரசின் கொள்கை முடிவில் ஆளுநர் தலையிட அதிகாரம் இல்லை என்ற தீர்ப்பைப் பெற்று இந்தியா முழுமைக்கும் கூட்டாட்சியியலைத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான அரசில் தமிழ்நாடு நிலைநாட்டியுள்ளது… என கூறி அந்த அறிக்கையை அவர் வெளியிட்டுள்ளார் ….

Watch Video | பேரறிவாளனின் விடுதலையால் உறவினர்கள் ஆனந்த கண்ணீர் நெகிழ்ச்சி வீடியோ

சுமார் நான்கு பக்கங்கள் உள்ள அந்த அறிக்கையை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். திமுக தொண்டர்கள் பலரும் இதை ஷேர் செய்து பேரறிவாளனின் விடுதலையை கொண்டாடி வருகின்றனர்.

மேலும் அண்ணாமலை அவர்களால் பேசியதாவது :- பேரறிவாளனை உச்ச நீதிமன்றம், அரசியல் அமைப்புச் சட்டம் 142-ன் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்திருக்கும் தீர்ப்பை
பாஜாக ஏற்றுக் கொள்கிறது. நம் ஒற்றுமையும், பாதுகாப்பையும், ஒருமைப்பாட்டையும் சமரசம் செய்வதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதிக்காது என்றும் நம்புகின்றோம் என்றார்

Spread the love

Related Posts

“நான் வேண்டுமென்றே தான் திராவிட மாடல் என்று சொல்லி வருகிறேன்” – முதல்வர் ஸ்டாலின்

வட அமெரிக்கா தமிழ் சங்க பேரவை இன்று நடைபெற்றது. அந்தப் பேரவையில் தமிழக முதலமைச்சர் காணொளி

நயன்தாரா கணவனிடம் போட்ட கண்டிஷன் மிரளும் திரையுலகம், அவசர பட்ட விக்கி

சமீபத்தில் விக்னேஷ் சிவனுடன் திருமண ஆன நடிகை நயன்தாரா திருமணத்திற்கு பிறகு சில முடிவுகளை எடுத்திருப்பாதாக

குடும்ப பெண்களுக்கு 1000 ருபாய் எப்போது ? | முதன் முறையாக வாய் திறந்த முதல்வர் ஸ்டாலின்.

கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது குடும்ப பெண்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற திட்டத்தை தற்போதைய