கள்ளக்குறிச்சி பக்கத்தில் இருக்கும் ஒரு கிராமத்தில் இயங்கி வரும் ஒரு தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வரும் மாணவி ஸ்ரீமதி. இவர் ஜூலை 13-ஆம் தேதி விபரீத முடிவை எடுத்து உயிரிழந்துள்ளார். இவங்களோட மரணத்தில் சந்தேகம் இருப்பதாக மாணவிகளும், பெற்றோர்களும் உறவினர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு அந்த போராட்டம் கலவரமாக மாறி அந்த கலவரம் கட்டுக்குள் வந்து இந்த வழக்கு தற்போது நீதிமன்றம் சென்றிருக்கிறது.

இந்த நிலையில் தற்போது செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் :- “இந்த போராட்டம் செஞ்சு அப்படி என்ன சாதிச்சீங்க ? ஒரே ஒரு குழந்தை இறந்ததற்கு, அதற்காக அவங்களோட பெற்றோரும் நீதிமன்றத்தை நாடி இருக்கும்போது. எதற்காக இந்த போராட்டத்தை செய்தீர்கள் ? அந்த ஒரு குழந்தை இறப்பிற்காக தற்போது பல்லாயிரம் குழந்தைகளின் எதிர்காலம் வீணடிக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் அவர்களின் டிசி எரிக்கப்பட்டுள்ளது. இதற்கெல்லாம் யார் காரணமோ அவர்களை சீக்கிரம் போலீசார் கண்டறிந்து தீவிர நடவடிக்கை எடுப்பார்கள்” என கூறியிருக்கிறார்.
