டெங்கு காய்ச்சல் காரணமாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் அவருக்கு தற்போது பன்றி காய்ச்சல் இருப்பது உறுதியாகியுள்ளது.
இந்த நிலையில் தலைமைச் செயலகத்தில் நேற்று முன்தினம் அமைச்சரவைக் கூட்டம் நடந்து முடிந்த பிறகு அன்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவிரி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார் அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு பின்பு நெகட்டிவ் என உள்ளது.
இது குறித்தான விளக்கம் தெரிவித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷுக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி உள்ளதாகவும் முன்னெச்சரிக்கையாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். அன்பில் மகேஷுக்கு உரிய சிகிச்சைகளை மருத்துவர்கள் வழங்கி வருவதாகவும், அவர் கூடிய சீக்கிரம் நலமுடன் திரும்பி வருவார் என்றும் அமைச்சர் மா சுபிரமணியன் கூறியுள்ளார்.
Viral Video | தாயார் மறைவு | நொருங்கி போயி கிடக்கும் மகேஷ் பாபுவின் விடியோவை பார்த்த ரசிகர்கள் சோகம்

இப்போது டெங்கு என கூறப்பட்டது இந்த நிலையில் அமைச்சர் அன்பில் மகேஷுக்கு இருப்பது பன்றி காய்ச்சல் தான் என உறுதியாக உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்ரமணியம் கூறியுள்ளார். அவர் தனிமையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவருடைய உடல்நிலை சீராக தான் இருக்கிறது எனவும் இரண்டு நாட்களுக்கு பிறகு வீடு திரும்புவார் என மாசுபிரமணியன் கூறியுள்ளார்.
