வகுப்பறையில் ஒழுங்கீனமாக நடந்து கொள்ளும் மாணவர்களுக்கு டி சி தரப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் குறியிருக்கிறார்.
பள்ளிகளில் தற்போது மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையே மோதல் போக்கு தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே வருகிறது. ஆசிரியர்களை மாணவர்கள் தாக்குவதும், அவர்களை மிரட்டுவதும், அவர்களை கேலி செய்வதும் என ஆசிரியர்கலை மதிக்காமல் மாணவர்கள் செயல்பட்டு வருகின்றனர். இவற்றையெல்லாம் வீடியோவாக எடுத்து அதை சமூக வலைதளத்திலும் பரப்புகின்றனர். அந்த வீடியோவை எல்லாம் சமூக வளைதளத்தில் பரப்பி அதை அன்பில் மகேஷ் அவர்கள் பார்க்குமாறு டேக் செய்து அவர்கள் மேல் நடவடிக்கை எடுங்கள் என்று பதி விடுகின்றனர்.

இவற்றையெல்லாம் பார்த்து தற்போது ஒரு முடிவுக்கு வந்துள்ள அன்பில் மகேஷ் தற்போது வாய் திறந்துள்ளார். அவர் பேசியது என்ன வென்றால்:- “ஆசிரியர்களிடம் மாணவர்கள் ஒழுங்கீனமாக நடந்து கொள்ளக்கூடாது, அப்படி மீறி ஒழுங்கீனமாக நடந்து கொண்டால் டி சி சான்றிதழில் மாணவர் நீக்கம் குறித்து குறிப்பிடப்படும், பிறகு பள்ளியிலிருந்து நீக்கப்படுவார்கள். மேலும் வரும் கல்வியாண்டு முதல் மாணவர்களுக்கு முதலில் நீதி போதனை வகுப்பு நடத்தப்படும்” என்றார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்.
