தமிழக அரசு நடத்தும் கல்வி தொலைக்காட்சி சிஇஓ பதவியில் ஒரு RSS ஐ சேர்ந்தவர் நியமன படுத்திருப்பதால் அமைச்சர் அன்பில் மகேஷ் பதவி விலக வேண்டும் என திமுக உடன் பிறப்புகள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
கல்வி டிவி தொலைக்காட்சி என்பது தமிழக அரசால் தொடங்கப்பட்ட ஒரு தொலைக்காட்சியாகும் இந்த தொலைக்காட்சிக்கு ceo பதவிக்கு மணிகண்ட பூபதி என்பவர் தேர்வாகி இருப்பதாக செய்திகள் வெளிவந்தது. இவர் ரங்கராஜ் பாண்டேவுடன் சேர்ந்து சாணக்கியன் டிவி துவங்க உதவியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது, இவரை தற்போது தமிழக அரசு நடத்தும் கல்வி டிவிக்கு பதவி கொடுத்ததற்கு காரணம் என்ன என அன்பின் மகேஷை கேட்ட போது அதற்கு அவர் கொடுத்த விளக்கம் என்னவென்றால் :-

“கொள்கை ரீதியாக இரண்டு பேரின் கொள்கைகளும் மாறுபடலாம் ஆனால் ரங்கராஜ் பாண்டே எனக்கு மிகவும் நெருக்கமானவர், இன்று கூட அவரிடம் நான் மெசேஜ் செய்தேன். அந்த அளவுக்கு நெருக்கமான ஒருவர், அதனால் தான் அவரைப் போன்று ஒருவரை நியமிக்க வேண்டும் என நியமித்தேன். கொள்கை ரீதிகளாக மாறுபட்டாலும் இந்த விஷயத்தில் அது ஒத்துப்போகும், செயல்பாடுகள் எப்படி இருக்கின்றது என்று தான் நீங்கள் பார்க்க வேண்டும்” என இப்படியாக அவர் கூறியிருக்கிறார். இதனால் தற்போது கொந்தளித்த திமுக உடன் பிறப்புகள் அன்பில் மகேசை பதவி விலக வேண்டும் என ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
