வலிமை படத்தை விநியோகம் செய்த பிரபல விநியோஸ்தகர் அன்பு செழியனிடமிருந்து ஐடி ரைடில் கட்டு காட்டாக சிக்கிய பணம் !

சினிமா பைனான்சியர் அன்பு செழியனுக்கு நெருக்கமானவர் வீட்டிலிருந்து ரூபாய் 13 கோடி ரொக்க பணம் சிக்கி உள்ளது.

இன்று காலை முதலே தமிழ் திரை உலகில் முன்னணி தயாரிப்பாளர்கள் வீட்டிலும் அவர்களுக்கு சொந்தமானவர்கள் வீட்டிலும் அலுவலகங்களிலும் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர், குறிப்பாக பிரபல தயாரிப்பாளரும் வினியோகஸ்தரூமான கலைப்புலி தாணுவின் வீடு மற்றும் அலுவலகங்கள் அதே போல் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபுவுக்கு சொந்தமான இடங்கள் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் வீடு மற்றும் அலுவலகங்களில் உட்பட 40க்கும் மேற்பட்ட இடங்களில் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது.

“அடுத்த 10 வருஷத்துல இவரு தான் CM..” சமயம் பார்த்து லெஜெண்ட்டை கோர்த்து விட்ட லெஜெண்ட் பட நடிகை…. அண்ணாச்சியை வெச்சு செய்யும் நெட்டிசன்கள்

அன்புச் செழியனுக்கு சொந்தமான சென்னை மற்றும் மதுரையில் உள்ள வீடு அலுவலகங்கள் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகள் அவரது குடும்ப உறவினர்கள் என பத்துக்கும் மேற்பட்டோர்களின் வீடுகளில் அதிரடியாக சோதனை நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சென்னை புரசைவாக்கத்தில் உள்ள அன்பு செழியனுக்கு நெருக்கமானவர் ஒருவரின் வீட்டிலிருந்து கட்டு கட்டாக 13 கோடி ரொக்க பணம் சாக்கு மூட்டைகள் கட்டி வைக்கப்பட்டது அம்பலமானது. இந்த பணம் கணக்கில் வரப்படாத பணம் என்றும் சினிமா தயாரிப்பு பணிகளுக்காக வைக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பணத்திற்கான உரிய ஆவணங்களை இன்று மாலைக்குள் அவர்கள் சமர்ப்பிக்காவிட்டால் ஐடி அதிகாரிகள் பணத்தை கைப்பற்றி அரசிடம் ஒப்படைப்பார்கள் என கூறப்படுகிறது. மேலும் இந்த சோதனை இரண்டு நாட்கள் நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அன்புச் செழியன் பிகில் படம் விநியோகம் தொடர்பாக 2020 ஆம் ஆண்டு வருமான வரித்துறையினரால் சோதனை நடத்தப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் தானு போன்ற மற்ற தயாரிப்பாளர்களின் அலுவலகம் மற்றும் வீடுகளில் இருந்தும் சில முக்கிய ஆவணங்களை கைப்பற்றி உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்திருக்கிறது. சமீப காலமாகவே தமிழ் சினிமாவில் கருப்பு பணப்புழக்கம் அதிகமாக இருப்பதால் இந்த சோதனை நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.

Spread the love

Related Posts

“மதுரை ஆதீனத்தை மிரட்டினால், திமுகவில் ஒருத்தர் கூட இருக்க மாட்டீர்கள்” மேடையில் திமுகவுக்கு பயத்தை காட்டிய எச்.ராஜா

மதுரை ஆதீனத்தை திமுக அரசு மிரட்டி வருகிறது. இந்தப் போக்கு தொடர்ந்தால் திமுகவில் ஒருத்தர் கூட

புது பட ரிவியூ | அதர்வா நடிப்பில் வெளியாகி இருக்கும் குருதியாட்டம் படம் எப்படி இருக்கு ? | உண்மையான விமர்சனம்

இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் அதர்வா, ப்ரியா பவானி சங்கர் போன்றோர்கள் நடிச்சு இன்னைக்கு திரையரங்கில்

23 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்றாக சேரும் ஜோடி | அடேங்கப்பா இது வேற லெவல் அப்டேட்டா இருக்கே!

அஜித் குமாரை வைத்து விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் ஐஸ்வர்யா ராய் நடிக்க போவதாக ஒரு

x