பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராக இன்று திருவேற்காடு பொதுக்குழு கூட்டத்தில் பதவி ஏற்றார் அன்புமணி ராமதாஸ். பாமக மாநில சிறப்பு பொதுக் கூட்டம் பாமக தலைவர் ஜிகே மணி தலைமையில் சென்னையில் உள்ள திருவேற்காடு ஜிபிஎன் பேலஸ்இல் இன்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பாமக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அந்த பொதுக்கூட்டத்தில் தற்போது இளைஞரணி தலைவராக இருக்கின்ற அன்புமணி ராமதாசை பாமகவின் நிரந்தர தலைவராக ஆக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பாமகவின் தற்போதைய தலைவர் ஜிகே மணி, சோம்நாத் சாட்டர்ஜி, ஐநா தலைவராக இருந்த பான் கீ மூன் போன்றவர்களால் தலைவராக நியமனம் செய்யப்பட்டார் அன்புமணி.
மேலும் திர்மானதை வாசித்த ஜி கே மணி அவர்கள் கூறியதாவது :- “மருத்துவ படிப்பிற்கான அகில இந்திய தொகுப்புகளில் பட்டியல் இன மாணவர்களின் இட ஒதுக்கீட்டை வழங்கி சிறப்பித்தவர மற்றும் சமூக நீதியை காத்தவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள். பாமகவின் தலைவராக தகுதியாக இருப்பவர் அவர் தான். மேலும் இந்தப் கட்சியை பல முயற்சிகள் கொண்டு முன்னோக்கி நகர்த்தி செல்வார். எனவே பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவர் அன்புமணி ராமதாஸ் நியமனம் செய்யப்படுகிறார்” என அந்தக் கூட்டத்தில் தெரிவித்தார் ஜி கே மணி.
