போலீசாரின் வஜ்ரா வாகனத்தின் மீது கல் வீசி பாமாவினர் தாக்குதல்… போலீசாரின் மண்டை உடைந்தது

பாட்டாளி மக்கள் கட்சியினர் நடத்திய என்எல்சி முற்றுகை போராட்டம் தற்போது கலவரமாக மாறியது. அங்கிருந்த போராட்டக்காரர்கள் காவல்துறையினர் மீது கற்களை வீசி தாக்கியதால் வன்முறை வெடித்துள்ளது. போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியும் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டும் கலைத்தனர்.

நெய்வேலியில் என்எல்சி 2வது சுரங்க விரிவாக்க பணிகளை கைவிட வலியுறுத்தி பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் முற்றுகையிடும் போராட்டம் இன்று காலை முதல்நடைபெற்றது. இப்போராட்டத்திற்குஇந்த போரத்திற்காக பல்வேறு மாவட்டங்களிலிருந்து பாமகவினர் திரண்டு வந்திருந்தனர்.

அப்போது அங்கே என்.எல்.சி. நிர்வாகத்தை கண்டித்து அன்புமணி ராமதாஸ் பேசினார். பல கோடி கொடுத்தாலும் நிலத்தை தரமாட்டோம் என்று சொன்னார் அன்புமணி ராமதாஸ். பின்னர், அன்புமணி ராமதாஸ் தலைமையில் என்எல்சி நிறுவனத்திற்குள் நுழைவதற்காக பா.ம.க.வினர் திரளாக புறப்பட்டனர். என்.எல்.சி. வாயில் நோக்கி புறப்பட்ட பா.மக.வினரை போலீசார் தடுத்து நிறுத்தியதால் அங்கு சற்று பதட்டம் நிலவியது.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அன்புமணி ராமதாஸ் உள்பட்ட பா.ம.க.வினரை போலீசார் கைது செய்ததோடு மட்டுமல்லாமல் போலீஸ் வாகனத்தில் ஏற்றி சென்றனர் அப்போது போலீஸ் வாகனத்தை மறித்து பாமக தொண்டர்கள் கல் வீசி தாக்குதல் நடத்தினர். இதையடுத்து போராட்டக்காரர்கள் மீது வஜ்ரா வாகனத்தை கொண்டு தண்ணீர் பீய்ச்சி அடித்து கூட்டத்தை கலைத்தனர். வானத்தை நோக்கி மூன்று முறை துப்பாக்கியால் சுட்டனர். இதனால் அங்கு மேலும் பதற்றம் நிலவியது.

பாமக தொண்டர்கள் கல்வீசி தாக்கியதில் காவல்துறையினர் சிலரது மண்டை சுக்குநூறாக உடைந்தது. பாமக-வினர் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியதால் என்எல்சி நிறுவனத்தின் நுழைவு வாயில் போர்க்களம் போல காணப்பட்டது. ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதால் நெய்வேலியில் பதட்டமான சூழ் நிலை நிலவி வருகிறது.

Spread the love

Related Posts

தமிழகத்திற்கு ஒருபோதும் பாஜக கால்வைக்க முடியாது என அண்ணாமலையை கடுமையாக அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் பேசியுள்ளார்

தமிழகத்திற்கு ஒருபோதும் பாஜக கால்வைக்க முடியாது என தமிழக பாஜகவை கடுமையாக அதிமுக அமைச்சர் ஜெயக்குமார்

“இந்தியா” என்ற பெயரில் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளதை கடுமையாக விமர்சித்துள்ளார் பிரதமர் மோடி

இந்தியா என்ற பெயரில் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளதை கடுமையாக விமர்சித்துள்ள பிரதமர் மோடி

Latest News

Big Stories