முதல் மனைவியின் சம்மதத்தின் பெயரில் இரண்டாவது மனைவியை திருமணம் செய்த கணவர் மனைவிகளின் தொந்தரவு தாங்க முடியாமல் தற்போது தலைமுறைவாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் தக்கிலே அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் தான் கல்யாணம். டிக் டாக் மூலம் பிரபலமடைந்த இவர் விமலா என்ற பெண்ணுடன் சில ஆண்டுகளுக்கு முன் நட்புடன் பழகியுள்ளார். வீடியோக்கள் போடுவது மூலம் ஏற்பட்ட நட்பு பின் நாட்களில் காதலாக மாறி ஒரு கட்டத்தில் இருவரும் ஒன்றாக இணைந்து டூயட் வீடியோ போடும் அளவிற்கு நெருக்கமாகி விட்டனர்.

இதை தொடர்ந்து அந்த பெண்ணுடன் கல்யாண் திருமணமும் செய்து கொண்டார். கல்யாணத்திற்கு பின்னர் சோகமாக இருந்த மாணவியிடம் கல்யாண் விசாரிக்க தன்னை நித்யஸ்ரீ என்ற ஒரு பெண் சந்தித்ததாக மனைவி கூறியுள்ளார். இதைக் கேட்டு மிகவும் அதிர்ச்சி அடைந்தார் கணவன் கல்யாண். ஏனென்றால் தன்னுடைய முதல் மனைவியான விமலாவை சந்திப்பதற்கு முன்பே இன்ஸ்டாவில் நித்யஸ்ரீ என்ற பெண்ணுடன் பழகியுள்ளார் கல்யாண். தற்போது தன்னுடைய காதலை விமலாவிடம் சொல்லித் நித்திய ஸ்ரீ தன்னை கல்யாண் உடன் சேர்த்து வையுங்கள் என கூறியுள்ளார்.
அவர் கெஞ்சி கேட்டதால் மனம் இறங்கி சரி என ஒத்துக் கொண்டு கணவனுக்கு தன்னுடைய முதல் மனைவியே இரண்டாவது கல்யாணம் செய்து வைத்தார். அதன் பிறகு மூன்று பேரும் சேர்ந்து வாழலாம் என முடிவெடுத்த பின்பு சேர்ந்து புகைப்படமும் எடுத்துக் கொண்டனர். அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக வைரல் அடித்தது. தற்போது இரண்டு மனைவிகளின் தொந்தரவு தாங்க முடியாமல் கல்யாண் தலைமறைவாகியுள்ளார் என்ற தகவல் வெளிவந்துள்ளது. இந்த சம்பவம் தற்போது அந்த பகுதியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
