தமிழ் சினிமாவில் முன்னணி இசை இயக்குனராக வளம் வரும் அனிருத்தின் தாத்தா எஸ்.வி ரமணன் காலமாகியுள்ளார்.
தமிழ் சினிமாவில் ஏ ஆர் ரகுமானுக்கு பிறகு தன்னுடைய முதல் படத்திலேயே தமிழ் சினிமாவை திரும்பி பார்க்க வைத்தவர் தான் அனிருத். தன்னுடைய முதல் படமான 3 படத்திலிருந்து ஒய் திஸ் கொலவெறி பாடல் மூலம் வைரல் ஹிட் அடித்தார். மேலும் அந்தப் படத்தில் இடம்பெற்ற எல்லா பாடல்களும் ரசிகர்களுக்கு இன்றளவும் ஃபேவரட் பாடல்கள் ஆகவும் போன் ரிங்க்டோன்களாகவும் இருந்து வருகிறது.
“விசிக கட்சியை ரத்து செய்து திருமாவளவனை கைது செய்ய வேண்டும்” – எச் ராஜா ஆவேச பேச்சு

அந்த அளவிற்கு தற்போது தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ள அனிருத் ஹிந்தியிலும் பாடல் அமைக்க தொடங்கியுள்ளார். தற்போது இவருடைய தாத்தாவான எஸ் வி ரமணன் வயது மூப்பு காரணமாக இருந்துள்ளார்.
இவரும் ஒரு இசையமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 80, 90களில் இயக்குனராகவும் பணிபுரிந்து இருக்கிறார். இவர் கண்ணதாசன் கதை வசனத்தில் ஜெயகாந்தன் இயக்கத்தில் உருவான யாருக்காக அழுதான் படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தற்போது இவரின் இறப்புக்கு தமிழ் சினிமா இரங்கல் தெரிவித்து வருகிறது.
