நேற்று பொது மேடையில் கச்சத்தீவை மீட்டு தரக்கோரி முதல்வர் பிரதமரிடம் கோரிக்கை வைத்தது மிகவும் தவறான விஷயம். கட்சத்தீவை மீட்டு தரக்கோரி கேட்க அவருக்கு என்ன தகுதி உள்ளது என ஸ்டாலினை கடுமையாக விமர்சித்துள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.
பிரதமர் மோடி நேற்று சென்னைக்கு பயணம் மேற்கொண்டு நேரு விளையாட்டு அரங்கில் பல திட்டங்களை அவர் தனது கையால் தூக்கி வைத்தார். இந்த வேளையில் மோடி மேடையில் இருக்கும் போதே கச்சத்தீவு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார். இந்த விழாவில் பேசிய போது அரங்கத்தில் இருக்கும் மக்களிடம் இருந்த நல்ல வரவேற்பு கிடைத்தது, பிறகு அந்தப் பேச்சுக்குக் கடும் விவாதங்களும் தொடங்கியது.

அந்த நிகழ்ச்சி முடிந்த பின்னர் அண்ணாமலை சென்னை விமான நிலையத்திற்கு வந்து பிரதமர் மோடியை வழியனுப்பி விட்டு பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் அண்ணாமலை கூறியதாவது :- “ஒரு மாநில முதல்வர் எப்படியெல்லாம் இருக்கக்கூடாது என்பதற்கு சிறந்த உதாரணம் நம்முடைய முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள். பிரதமர் மோடியை மேடையில் வைத்துக்கொண்டே முதலமைச்சர் ஸ்டாலின் நடத்திய அரசியல் நாடகம் தமிழ் அரசியல் சரித்திரத்தில் ஒரு கரும்புள்ளி.
கச்சத்தீவை தாரை வார்த்து விட்டு தற்போது என்ன தைரியத்தில் அதைப்பற்றி பிரதமரிடம் கோரிக்கை வைக்கிறார்கள் ? கட்சத்தீவை மீட்டு தர கோரிக்கை வைக்கும் தகுதி முக ஸ்டாலினுக்கு கிடையவே கிடையாது. எப்படி ஜிஎஸ்டி கவுன்சில் நடக்கிறது என்பதுகூட தெரியாமல் முதல்வர் பேசியது தமிழகத்தை அவமானப்படுத்துவது போல் ஆகிறது. தமிழகத்தையும், இந்தியாவையும் எப்போதுமே பிரதமர் மோடி பிரித்துப் பார்க்க விரும்பவில்லை. அதனால் முதலமைச்சர் பேசியது சுத்தப்பொய். முன்னுக்குப் பின் முரணான தகவலை பேசிவிட்டு திராவிட மாடல் என்றும் கூறுகின்றனர்” என அண்ணாமலை கடுமையாக ஸ்டாலினை விமர்சித்திருக்கிறார்.
